பக்கம்:தமிழ் மணம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சங்க காலத்தில் சைவம்-2 77 யினைப் பெருக்கி உலகினை வாழ்விப்பது மேல் என நினைக் கின்றான்; தான் சாவத் துணிந்து, சாவினைத் தன் அகத் தடக்கி, அவள் வாழ நெல்லிக்கனி தருகின்றான். இதனை அறியாது. தந்த கனியைச் சுவைத்த அவ்வை, பின் உண்மை அறிந்து வருந்துகிறாள். அவளுக்குச் சிவபெருமான் நினைவு வருகிறது. அவனும் இத்தகையவனே. கடல் கடைந்த தம் முயற்சியில் ஆலகால நஞ்சு கண்டு. தேவர்கள் நடுங்கி அழுது ஆண்டவனை அடைய, அவர்களைக் காக்க அந்த நஞ்சின் பயனைத் தான் நுகர அதனை வாரி விழுங்குகிறான். அவர்கள் வாழ. இவன். சாவினை எதிர் ஏற்கிறான். சாவாப் பெரியோன் சாவ முந்து வதே அருளின் வடிவம். தான் அழியவருவழியும் அருளுவ தன்றோ பேரருள்? தூயவன் களங்கமெல்லாம் விழுங்கு கிறான். பாதகமே சோறு பற்றியவாறு இதுதான். இதுவே நீலகண்டம் என்பதன் கருத்து. சாவைத் தின்னும் சாவாத பெருமான் அதியமானைச் சாவாது காக்க, அவன், அவர் போல நீடூழி வாழவேண்டும் என வாழ்த்துகிறாள் அவ்வை. இந்த அருளே தாய்மை. ஆதலின், ஆண்டவன் அரு ளைப் பெண்ணாக்கி ஆற்றலாம் அறிவு ஆண்பாகமாகவும். அருள் எனும் இன்பம் பெண்பாகமாகவும் அமைத்த அர்த்த காரீச்சுர வடிவமாகச் சிவனைக் காண்பதும் பழைய மரபு. உமையலால் உலகம் இல்லை. தாயும் தந்தையும் சேர்ந் தன்றோ உலகம் பிறக்கும்? தாயும் தந்தையுமாய் ஈரணி பெற்ற எழிற்றகையன் அவன். கடவுளை ஆண் என்று கருதி யவர் பலர். அம்மையப்பனாம் ஓருருவில் ஈருருவும் கண்டவர் நம்மவர். இனி இரண்டாய்ப் பலவாய்ப் படிப்படியாய் அந்நாளைய பரிணாமக் கொள்கைப்படியும். விவர்த்தம் என்ற இந்நாளைய கொள்கைப்படியும் "நீலமேனி வாலிழை பாகத் தொருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே' எனப் பாடுகின்றார் பெருந்தேவனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/77&oldid=1481451" இலிருந்து மீள்விக்கப்பட்டது