பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக் பாராட்டுரைகள்

திருவருள் தவயோக மதுரை ஆதீனம் யூரீலயூரீ சோமசுந்தர ரீ ஞானசம்பந்த தேசிக

பரமாசாரிய சுவாமிகள் எல்லாம் வல்ல எம்பெருமானது இன்னருளால் எல்லா நிலங்களும் எய்துக.

தங்களுடைய ஏப்ரல் 28 ஆம் தேதி கடிதம் கிடைத்தது. நம்மை ஆண்டுவருகிற கருணு மூர்த்தியாகிய கடவுள், காரைக்கொண்டு மக்களுக்கு என்ன நன்மைகளைச் செய் விக்க வேண்டுமென்று கற்பிக்கின்றனரோ, அந்தப்படியே தகுதி வாய்ந்தவர்கள் உள்ளத்தில் அதனைத் தோற்றுவித்து, அது நிறைவேறும்படியும் செய்கிறர். அவ்வாறு செயல்படக் கூடிய தகுதி வாய்ந்த ஒரு சிலரில் தாங்களும் ஒருவராக அமைந்து திகழத் திருவருள் கூட்டியிருக்கிறதென்பதை நாம் அகக்கண்ணுல் கண்டு மகிழ்கின்ருேம்.

தங்களுடைய பல நூல்களையும் பார்வையிட்டிருக்கின் குேம். தங்களுடைய சொற்பொழிவுகளையும் நேரில் கேட்டி ருக்கிருேம். ஆதலால், தங்களது எழுத்து வன்மையையும் சொல்லாற்றலையும் நாம் நன்கறிவோம் சொல்லாற்றல் பெற்ற பலர், தங்களது அரிய கருத்துக்களையும் அனுபவங்களையும், பின் சந்ததியார்களுக்குப் பயன்படுமாறு எழுத்தில் அமைத்துக் கொடுப்பதில்லை. அவ்வாறில்லாமல், தாங்கள், திருவருளால் பெற்ற தங்களது ஆராய்ச்சிகளை எழுத்தில் அன்மத்து உலகிற்குக் கொடுத்திருப்பது பாராட்டற்குரியது.

திருமூலரது திருமந்திரத்தில் முக்கிய 365 பாடல்களுக் குத் தாங்கள் விளக்கவுரை எழுதியிருப்பதைப் பார்வையிட் டோம், பாமர மக்களும் படித்துப் பெர்ருளுணர்ந்துகொள்ளும் வகையில் எழுதப்பெற்றுள்ளது போற்றற்குரியதாகும்.

தங்களுடைய நூல்களை எல்லாம் தமிழுலகம் பேணிப் போற்றிப் பயன் பெறவும், தாங்கள் இன்னும் அரிய நூல்கள் புல வெளியிடுவதற்குரிய வாய்ப்புக்கள் அனைத்தும் பெற்றுத் திகழவும் திருவருள் பாலிக்குமாறு. எல்லாம் வல்ல அங்கய்ற் கண்ணி பங்களும் ஆலவாய் அண்ணலைப் பிரார்த்தித்து ஆசீர்வுதித்த விபூதி குங்குமப் பிரசாதமும் இத்துடன் எழுந் தருளச் செய்திருக்கிருேம். திருவருட் கவசமாக அணிந்து மேன்மையடைவீர்களாக். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மந்திரம்.pdf/10&oldid=571187" இலிருந்து மீள்விக்கப்பட்டது