பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

99

அங்கே மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்வார்கள். சக்கரத்தின் வாயிலாகத்தான் மூர்த்தத்தின் திருவருட் சக்தி அந்தத் தலங் களில் இன்றும் அருள் சுரந்து கொண்டிருக்கிறது. பசு நன்முகப் பால்தரவேண்டும் என்ருல் அதற்குரிய முறையினை அறியவேண் டியது அவசியமாகும் அன்ருே? அப்படியே இறைவனுடைய திருவருளைப் பூரணமாகப் பெற வேண்டுமானல், அவனுக்கு உகந்த முறையில் எல்லா வகையிலும் நாம் வழிபட்டாக வேண்டும். அந்த வழிபாட்டுக்குரிய சாதனமாக அமைவதே சக்கரம். சக்கரத்தின் வாயிலாக அம் மூர்த்தியினுடைய மந்திரங்களைக் கூறி அருச்சனை செய்வது நமது முன்ஞேர்க ளுடைய மரபு. இந்தச் சீரிய கருத்தைப்பற்றி,

கின்றது சக்கரம் நீளும் புவியெலாம் மன்றது வாய்கின்ற மாயகன் டைனக் கன்றது வாகக் கறந்தனன் கந்தியும் குன்றிடை கின்றிடுங் கொள்கைய ளுமே”

எனத் திருவம்பலச் சக்கரத்தில் 35 ஆம் திருப்பாடலில் திருமூலர் பேசியிருக்கிருர் தாய்ப் பசுவின் பாலை அதன் கன்றின் மூலம் கறந்து கொள்வதுபோல, இறைவனுடைய அருளை இந்தச் சக்கரத்தின் வாயிலாகவே பெரியவர்கள் பெற்று அமைதி அடைந்திருக்கிருர்கள் என்பது நன்கு தெரி கிறது.

தனுகரண புவன போகங்களை எல்லாம் பெற்றிருக்கின்ற நாம், நம் புலன்களால் அந்த இறைவனை உணர்ந்து கொள்ள முடியாது என்ருலும், உருவம் அற்று விளங்குகின்ற இறைவனை உருவத்தில் வழிபடுவது சிறந்த எளிமையான முறையாகும் என்பதை முன்னேர் உணர்ந்து, உருவ வழிபாட்டிலே ஈடு பட்டிருந்தனர். இதனை வயிரவச் சக்கரம் எடுத்துக் காட்டு கின்றது. இறைவனுக்கு வடிவம் உண்டு என்பதை நமக்குப் புலப்படுத்துவதற்கே, திருக்குறள் ஆசிரியருங்கூட,

'கற்றதனுல் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்ருள் தொழாஅர் எனின்'