பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

103 பூசனை செய்யப் பொருந்தியோ ராயிரம் பூசனை செய்யு மதுவுடன் ஆடுமா பூசனை சாந்து சவாது புழுகு நெய் பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே”

ஆயிரம் மலரெடுத்து இறைவனுடைய திருவடிகளில் தூவிப் பூசிப்பதும், ஆபிரந்தரம் நாவினல் அவனது திரு நாமத்தைச் சொல்லுவதும் பூசை முறைகளாம்.

"ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றுமில் லார்க்கு ஆயிரம்

திருநாமம் பாடிகாம் தென்ளேணம் கொட்டாமோ”

என்பர் மணிமொழியாரும். இறைவனைத் தேல்ை முழுக் காட்டுதலும் வேண்டும் என்பதனையும் இப்பாடலில் குறிப்பிடு கிரு.ர். -

ஆண்டவனுக்குப் பாலாலும், தயிராலும், தேலுைம் அபிஷேகம் செய்வதும் பூசை முறைகளாம். இதனைச் சுந்தரர் வாக்காகியதேளுேடு பால் தயிர் ஆட்டுகந்தானே” என்னும் அடிகளால் தெரியலாம். சாந்து, சவ்வாது, புனுகு முதலான வாசனைப் பொருள்களினல் வழிபடுகிற முறையையும் திரு மூலர் குறிப்பிட்டிருப்பதை நாம் உணர்தல்வேண்டும். மேலும் பூசனை வந்தனை வழிபாடு அர்ச்சனை ஆகிய முறைகள் அழகு பட நான்காம் தந்திரத்தில் அருச்சனை என்ற பகுதியில் நன்கு விளக்கப்பட்டுள்ளன. பூசனைக்குரிய மலர்கள் இன்னின்ன என்பதை,

'அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்

வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே"

என்ற பாட்டாலும், வாசனைப் பொருள்களை அணியும் முறை யினை, -