பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

105

வேண்டிய வாறு கலகமு மாயிடும் வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின் வேண்டிய வாறு வரும்வழி கேட வேண்டிய வாறதுவாகுங் கருத்தே"

வழிபாடு புரிபவர்களின் பகைவர்கள் தங்களுக்குள் கலகமிட்டு மாய்வர்: வேண்டியபடி நடக்கலாம்; எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்னும் கருத்துக்களே இந்தப் பாடல் நமக்கு அறிவித்து நிற்கின்றது. வேண்டிய ஆறு என்பன தம்பனம், மோகனம், உச்சாடனம், வித்துவேடணம், வசியம், மாரணம் ஆகும். இவ்வாறனுள் மாரணம் ஒழிந்த ஏனைய ஐந்தும் பகையை ஒழிக்கப் பயன்படுவன. மேலும் திருமூலர்,

'கடந்த வயிரவன் சூல கபாலி

கடந்து பகைவனைக் கண்ணது போக்கித்

தொடர்ந்த உயிரது உண்னும் பொழுது

படர்ந்த உடல்கொடு பந்தாட லாமே” என்றும் கூறியுள்ளார். நாள் செய்வது நல்லோர் செய்யார்’ ஆதலின், எதையும் காலம் அறிந்து செய்யவேண்டும். பகைவரை வெல்ல இந்த நாளில் புறப்படவேண்டும் என்பது இச் சக்கரப்பகுதியில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'அறிந்த பிரதமையோ டாறு மறிஞ்சு அறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம் அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாக அறிந்து வலமது வாக கடவே'

என்பது அம்மந்திரம், பிரதமை முதல் சஷ்டிவரையிலுள்ள ஆறு திதிகளிலும், அஷ்டமி, தசமி, துவாதசி, சதுர்த்தசி ஆகிய திதிகளிலும் புறப்பட்டுப் பகைவரை எதிர்த்தால், அப்பகைவர்களை வெல்லலாம் என்பதே இம்மந்திரப் பாடலின் கருத்து ஆகும். இங்ங் ைம் நாட்களே அறிந்து புறப்படும்போது தாம் எந்தப் புலத்தை நாடிச் செல்கின்றனரோ அந்தப்புலம்