பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

108

ஒப்பற்ற சிவபெருமான் அன்பர் உள்ளத்தில் அமர்ந்திருப்பவன்

2. சிவனொடொக் கும்தெய்வம் தேடினும் இல்லை அவனொடொப் பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்ஒளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே.

(இ - ள்) சிவபெருமானோடு ஒப்பாகும் தெய்வம் எங்குத் தேடினும் இல்லை. அச் சிவனுக்கு நிகரானவர் யாவரும் இலர். எல்லா உலகங்கட்கும் அப்பாற்பட்டுள் ளவன். அச்சிவம் பொன்போல ஒளிவிடும் தீவண்ணம் போன்ற சடைமுடி உடையவன். அவன் அன்பர்களின் மனத்தாமரையில் அமர்ந்திருப்பவன்.

(அ - சொ) புவனம் - உலகம். கடந்தன்று கடந்தது. தவனம் - நெருப்பு. தாமரையான் - அன்பர்களின் மனமாகிய தாமரையில் இருப்பவன்.

(விளக்கம்) சிவத்தின் சடை செம்மை நிறம் வாய்ந்தது. ஆகவே, அச்சடைக்கு நெருப்பு உவமையாயிற்று. அச்சடை ஒளியுடைமையின் பொன்னொளியும் உவமை ஆயிற்று. இங்கு மங்கலம் என்பது சிவம் ஆகும். ஆகவே என்றும் மங்களமாக இருக்கும் பொருளைச் சிவம் என்றனர் முன்னேர்.

      சிவபெருமானே யாவற்றிற்கும் காரணன்

3. அவனை ஒழிய அமரரும் இல்லை அவன் அன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவன்அன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவன்அன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

(இ - ள்) சிவபெருமானைத் தவிர்த்து வேறு தேவர்கள் இலர். (அவனேதான் தேவன்). அவனை விடுத்துச் செய்யக்