பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

i 10

பக்கத்தில் நெருக்கமாக இருப்பவன். பெற்ற தாயைக் காட்டிலும் நல்லவன்.

(அ - சொ) வெய்யன் - வெம்மையாக இருப்பவன். புனல். நீர். தண்ணியன் - குளிர்ச்சியாய் இருப்பவன். சேய் - பிள்ளை. அணியன் - சமீபத்தில் இருப்பவன்.

(விளக்கம்) இயற்கைப் பொருள்களின் தன்மைக்கும் மேலான தன்மையன் சிவன் ஆதலின், தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் எனப்பட்டனன். இதல்ை சிவபெரு மானது பேர் ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டது. தாயே அன்பிற்கு எடுத்துக்காட்டு. அத்தாயினும் சிவன் அன்புடைய்ன் ஆவன். இதனால் அவனது பேரருள் உடைமை விளங்குகிற து.

சிவபெருமானல் தொழப்படும் தெய்வம் வேறு இல்லை 5. பொன்ஞல் புரிந்திட்ட பொன்சடை என்னப்

பின்னுல் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னுல் தொழப்படும் எம்இறை மற்றவன் தன்னுல் தொழப்படு வாரில்லை தானே. (இ - ள்) பொன்னல் அழகுறச் செய்யப்பட்டது போன்ற பொன்மயமான சடையானது பின்னல் விளங்க இருப்பவன் நந்தி என்ற பேருடையவன், என்னல் வணங் கப்படும் எம் இறைவன். ஆனால், அவனல் வணங்கப்படும் தெய்வங்கள் எவையும் இல்லை.

(அ - சொ) புரிந்திட்ட - செய்யப்பட்ட பிறங்க விளங்க. இறை - தலைவன்.

(விளக்கம்) இறைவன் சடை பொன்போல விளங்க வல்லது. இறைவன் ஈடும் எடுப்பும் இல்லாதவன். ஆதலின் அவனல் வணங்கப்படுதற்குரிய தெய்வம் எதுவும் இல்லை யாயிற்று. இதல்ை இவனே வணங்குதற்குரிய தெய்வம் என்பது தெளிவாயிற்று.