பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

Í Íİ

எல்லாமாய் இருப்பவன் சிவனே

6. தானே இருகிலம் தாங்கிவிண் ணுய்கிற்கும்

தானே சுடும் அங்கி ஞாயிறு திங்களும் தானே மழைபொழி தையலும் ஆய்கிற்கும் தானே தடவரை தண்கடல் ஆமே. (இ- ள்) சிவபெருமானே இப்பேருலகைத் தாங்குபவன். ஆகாயமாய் இருப்பவனும் அவனே. சுடுகின்ற நெருப்பும், சூரியனும் சந்திரனும் அவனே ஆவான். மழையாய்ப் பொழிகின்ற அருளும் அவனே ஆகும். பெரிய மலைகளும் குளிர்ந்த கடலும் அவனே யாவன்.

(அ - சொ) இருநிலம் - பெரிய பூமி. விண் - ஆகாயம். அங்கி - நெருப்பு. ஞாயிறு - சூரியன், திங்கள் - சந்திரன். தடவரை - பெரியமலை, தண்கடல் - குளிர்ச்சியுடைய கடல். (விளக்கம்) உமையம்மையார் அருளே திருமேனியாக உடையவள். மழையும் அருளால் பெய்கிறது. ஆகவே, அம் மழை தேவியாக ஈண்டுக் குறிக்கப்பட்டது. -

சிவன் ஒருவனே இறவாத தெய்வம்

7. கண்ணுத லான்ஒரு காதலின் கிற்கவும்

எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர் மண்ணுறு வார்களும் வான்.உறு வார்களும் அண்ணல் இவன்என்று அறியகில் லார்களே. (இ - ள்) நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் ஆருயிர்கட்கு அருள் செய்ய விருப்புடன் அழிவின்றி இருப் பவன். ஆனல் கணக்கற்ற தேவர்கள் இறந்து போயினர். இதை அறிந்தும், மண்ணுலகில் உள்ள பலரும், தெய்வ லோகத்தில் உள்ள பலரும் சிவபெருமானே, பெருமையில் சிறந்த மேலானவன் என்று அறியும் அறிவு இல்லாதவர் களாய் உள்ளார்களே! --