பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

fi ż

(அ- சொ) துதல் - நெற்றி. மண் - பூமி. வான் - தேவ

லோகம். உறுவார் - வாழ்பவர். அண்ணல் - பெருமையிற் சிறந்த மேன்மையாளர்.

(விளக்கம்) ெந ற் றி யி ல் கண்ணையுடைமையின் சிவ பெருமான் கண்ணுதல் ஆவான். தம்மைப்போல இறக்கும் தெய்வத்தை நாடாது இறவாத தெய்வத்தை நாட வேண்டு மென்ற உண்மையினை மக்களும் தேவரும் அறியாமல் இருக்கின் றனரே என்பது இம்மந்திரத்தால் விளங்கும் கருத்தாகும்.

உண்மை உறவினன் ஈசனே ஆவன்

8. காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்

மாயம் கத்துரி அதுமிகும் அவ்வழி தேசம் கலந்தொரு தேவன்என் றெண்ணிலும் ஈசன் உறவுக் கெதிர்இல்லை தானே. (இ - ள்) வெங்காயம் பெருங்காயம் என்ற இரண்டும் உள்ளன. இவ்வாருன மாறுபட்ட காயங்கள் கலந்து இருந் தாலும் மணம் மிகாது. ஆல்ை கஸ்தூரி மணம் தருவது போலக் குணமாகிய மணம் மிகுந்து காணப்படும். அந்த இடத்தில் எல்லாத் தேசங்களிலும் கலந்த ஒப்பற்ற தேவன். ஈசன் என எண்ணுதல் வேண்டும். அதுபோதுதான் அவனைப் போன்ற உறவினர் எவரும் இலர் என்பது பெறப் படும். -

(அ - சொ) காயம் - பெருங்காயம், வெங்காயம். மாயக் கத்துரி - கரியநிறக் கத்துாரி, மாயம் - கருமை.

(விளக்கம்) பரகர்யம், அபரகாயம் என்ற இரண்டுஉடம்பு கள் ஈண்டுப் பெருங்காயம், வெங்காயம் எனப்பட்டன. இதனால் இருவகை உடம்புகளுடன் பற்றற்று நின்ருலும், வீடு பெற இயலாது, இறையருளைச் சிறிது பெறினும் வீடுபெறலாம் - என்பது கருத்து.