பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

113

தன்ன நாடுகின்றவர்களைச் சிவன் நீங்கான் மறவான் 9. பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்

இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும் துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால் மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. (இ. ள்) இவபெருமான் என்றும் பிறவாதவன். பேரரு ளாளனும் அவனே ஆவன். இறப்பும் இல்லாதவன், எத்தகைய உயிர்கட்கும் இன்பம் அருள்பவன், அன்பர்களே விட்டு நீங்காதவன். இத்தகைய இயல்புடைய இறைவனத் தொழுங்கள்; அங்ங்னம் தொழுதால், அவன் உங்களை மறக்கமாட்டான். அழியாத ஞானமும் உண்டாகும்.

(அ சொல்) பிஞ்ஞகன் - பின்னல் சடையுடைய சிவன்; சத்தியுடன் பின்னிக் கிடப்பவன். துறப்பிலி . நீங்காதவன். மாயா விருத்தம்-அழியா ஞானம். நீங்கான் - மறவான்.

- (விளக்கம்) யார் அவனத் தொழுகின்ருர்களோ, அவர் களே என்பது கருத்து.

வணங்குபவர்க்கு ஈசன் வழித்துணைவன் 10. இணங்கிகின் ருன்எங்கும் ஆகிகின் ருனும் பிணங்கிகின் ருன்பின்முன் ஆகிகின் ருனும் உணங்கிகின் ருன்அம ராபதி நாதன் வணங்ககின் ருர்க்கே வழித்துணை யாமே. (இ - ள்) சிவபெருமான் எங்கும் கலந்து இருப்பவன். எங்குமாய் இருப்பவன். ஆல்ை, அவனது அருளைப் பெரு தார்க்கு அவர்கள் கண்முன் தோன்ருது மாறுபட்டு இருப் பவன். உலக ஒடுக்கத்திற்குப் பின்னும், உலகத் தோற்றத் திற்கு முன்னும் இருப்பவனும் அவனே. மறைந்து நிற்ப வனும் அவனே. அவனே தேவர்களின் தலைவனை தேவேந்திரனுக்குத் தேவன் ஆவான். யார் தன்னை வணங்கி நிற்கின்ஒர்களோ அவர்கட்கு வழித்துணை அவனே ஆவான்.

த.-8