பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

童芷”

(விளக்கம்) இறைவன் உலகுக்கெல்லாம் விளக்காய் இருப் பவன், அந்த ஒளியாம் விளக்கு விடியுமானல், உலகில் இருள் குழ்த்து விடும். ஆகவே இறைவனம் விளக்கு விடியாவிளக்கு எனப்பட்டது.

நாம் அறிய வேண்டுவது 16. சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று. பாடுவன் பல்மலர் தூவிப் பணிந்துகின் ருடுவன் ஆடி அமரர் பிரான் என்று நாடுவன் யான்கின் றறிவது தானே. (இ - ள்.) இறைவன் திருவடிகளை என் சென்னியில் தரித்துக்கொள்வேன். மனத்தில் அமர்த்துவேன். அவனே தலைவன் என்று பாடுவேன். பல மலர்களையிட்டு வணங்கு வேன். நின்று ஆடுவேன். ஆடியபின், தேவர்களின் தலைவன் என்று சிந்தனை செய்வேன். இவையே யான் அறிந்தவை ஆகும். - -

(அ- சொ) நாடுவன் - சிந்தை செய்வேன். (விளக்கம்) திருமூலர் தாம் அறிந்தவை அவன் திரு வடியைச் சூடுதலும், மனத்தில் கொள்ளுதலும், பாடுதலும், மலர் சூடுதலும், ஆடுதலும் என்று கூறுவதால், நாமும் இவற்ற்ை மேற்கொள்ள வேண்டும் என்பதாம்.

வேதமே அனைத்திற்கும் காரணம் 17. வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின் ஓதத் தகும்.அறம் எல்லாம் உள தர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஒதியே வீடுபெற் ருர்களே. (இ - ள்) வேதத்தை விட்டு நீங்கிய கருமம் எதுவும் இல்லை. வேதத்தில் சொல்லத்தக்க தருமங்கள் எல்லாம் உள்ளன. ஆகவே அறிஞர்கள், தர்க்க வாதத்தைக்