பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

1:5

வையகம் பெறுக எனப்பட்டது: மறைப்பொருள் பெருமைக்கு

உரிய இடம் என்பதை ஈண்டுக் காண்க. மந்திரம் என்றது

ஈண்டுச் சிவ சிவ' என்னும் மகா மந்திரத்தையே ஆகும். இதுவே மறைப் பொருள். இதனை நாவால் உள்ளுக்குள்

உச்சரிக்க வேண்டும் என்பார், ஊன் பற்றி நின்ற உணர்வுறு

மந்திரம் என்றனர். இடைவிடாது உச்சரிக்க வேண்டும்

என்பதற்காகவே பற்றப் பற்ற எனப்பட்டது.

திருமால் உண்மையையும் பிரமன்

பொய்யையும் கூறல் 27. அடிமுடி காண்பர் அயன்மால் இருவர்

படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி முடிகண் டிலேன் என்றச்சுதன் சொல்ல முடிகண் டேன்என்றயன் பொய்மொழிந் தானே.

(இ - ள்) பிரமனும் திருமாலும் இறைவனது முடியை யும் திருவடிகளையும் காண முயன்றனர். ஆனல் அவர்கள் எண்ணியபடி முடி அடிகளைக் கண்டிலர். ஆகவே, இவ் விருவரும் பூமியில் இறைவன் திருமுன் கூடியபோது, திருமால் 'ஐயனே யான் உனது திருவடிகளைக் கண்டில்ேன்' என மெய் கூறப் பிரமன் 'ஜய, யான் முடியைக் கண்டேன்’ எனப் பொங் கூறினன்.

(அ-சொ) அயன் - பிரமன். மால் விஷ்ணு, படி - எண்ணியபடி. பார் மிசை - பூமியில். அச்சுதன் - விஷ்ணு.

{விளக்கம்) திருமால் பிரமன் இருவரும் தாம் தாம் முதல்வர் என்று வாதமிட்டு இறைவனே அணுக, இறைவன் அவர்களினும் ஒரு முதல்வர் ஒருவன் உளன் என்பதை உணர்த்தத் தான் திப்பிழம்பாய்நின்று, அப்பிழம்பின் அடி முடிகளைத் தேடிக்காணப் பணித்தனன். பிரமன் முடியையும் திருமால் அடியையும் காண முறையே அன்னமாகவும் பன்றி யாகவும் வடிவு கொண்டு தேட முயன்றனர். இக்கருத்தையே முன்னடி கூறுவது.