பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

129

தேன் பொருந்தியகொன்றை மலரைச் சூடிய சிவபெருமான் தன் அருளால் அமைத்த வேறுபாடே அன்றி வேறு இல்லை. அந்த வானவர்களும், மனிதர்களும் விரும்பும் அளவு விரும்பி ஆராயும் தெய்வம், அச் சிவத்தைத் தவிர்த்து வேறு இல்லை. ஆகவே, நாம் நம் உடம்பில் அமர்ந்த அந்த இறைவனை உணர்வதுதான் நல் உணர்வாகும்.

(அ - சொ) வானவர் - தேவர். கொன்றை கொன்றை மலர். அமர்ந்து - விரும்பி அல்லது மகிழ்ந்து. ஒரும் ஆராயும். தனி ஒப்பற்ற, ஊன் - உடம்பு.

(விளக்கம்) வானவர் ஆயினும் மக்களாயினும் அவர்களின் மேலானவர் இறைவர் சிவபெருமான் ஆவர். ஆதவின் தனித் தெய்வம் மற்றில்லை எனப்பட்டது. உடம்பு தசையால் ஆனது: ஆகவே உடம்பு ஊன் எனப்பட்டது.

முப்பொருள் தன்மை

33. பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்

பதியினைப் போல்பசு பாசம் அளுதி

பதியினைச் சென்றணு காப்பசு பாசம்

பதியணு கில்பசு பாசம் கிலாவே.

(இஸ்) பதி என்றும், பசு என்றும், பாசம் என்றும் கூறப்படும் இம்முப்பொருள்களில் பதியைப்போலப் பசுவும் பாசமும் தொன்றுதொட்ட பொருள்களோ. பதியை அணுகின் பாசம் நிற்கமாட்டாது.

(அ - சொ) பதி - சிவம். பசு ஆன்மா. பாசம்-ஆன்மாவை என்றும் பற்றி நிற்கும் உலக இன்பமும் அதல்ை வரும் பாவ புண்ணிய பந்தங்களும். அனுதி - பழமையானது. நிலா - நிற்க மாட்டா. .

(விளக்கம்) பதி என்றும் உள்ள பொருள்: தொன்மை யானது. அதைப்போலவே பசுவும் பாசமும் தொன்மையன.

9 سسسس مقيم