பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

131

இறைவன் அளித்தவை

35. அளித்தான் உலகெங்கும் தானை உண்மை

அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள் அளித்தான் பேரின்யத் தருள்வெளி தானே.

(இ-ள்) இறைவன் உலகெங்கும் தானே ஆகி இருக்கும் உண்மையினை அருளால் உணர்த்தினன். தேவர்களும் உணராத பேரின்ப உலகையும் பக்குவர்கட்குத் தந்தனன். மண்ணவர் களிக்கும் வண்ணம் சிதம்பர சிற்சபையில் நடனம் புரியும் அழகிய திருவடிகளைத் தரிசிக்க அளித் தனன், பேரின்பப் பெருவாழ்வாகப் பெருவெளியினையும் அளித்தனன். - -

(அ - சொ) அமரர் - தேவர். உலகம் - சிவலோகம். திரு . சிறந்த மன்று - சிதம்பரம் பொற்சபை. திரு . அழகிய, தாள் - திருவடிகள்.

(விளக்கம்) இறைவன் எங்கும் எவ் உலகமும் நிறைந் தவன். அந்த உண்மையினை அவன் அருளால் அறிவித்தால் அன்றி அறிந்துகொள்ளுதல் அரிது. ஆதலின் அந்த உண்மையை அவன் அளித்தமையின் அளித்தார். தானை உண்மை’ எனப்பட்டது. பெருவெளி என்றது சிதாகாயமாகிய சிதம்பர தரிசனமும் ஆகும். அது பேர் இன்பம் தரவல்லது ஆதலின், அளித்தான் பேரின்பப் பெருவெளி எனப்பட்டது. உலகம் பல என விஞ்ஞானிகள் கண்டாலும், சிவலோகம் ஒன்று உளது என்பதை அவர்களும் அறியார். அது தேவர் களாலும் அறிய ஒண்ணு உலகம். ஆனால் இதனை அவன் பக்குவர்கட்கு அளிப்பான் என்பது பெறப்படுகிறது. இறைவனது குஞ்சிதயாத தரிசனமே மேல் வீட்டிற்கு வழி ஆதலின், அந்தத் திருவடியினேயும் காட்டினர் எனப்பட்டது.