பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

133

தியான கிலேயில் எவற்றையும் காணலாம்

36. தூங்கிக் கண்டார்சிவ லோகமும் தம்உள்ளே தூங்கிக் கண்டார்சிவ யோகமும் தம்உள்ளே தூங்கிக் கண்டார்சிவ போகமும் தம்உள்ளே தூங்கிக் கண்டார்நிலை சொல்வதெவ் வாறே. (இ-ள்) செயலற்றுள தியான நிலையில் இருப்பவர் தம் உள்ளத்துள் இறைவனது சிறப்பு உறைவிடமான சிவலோ கத்தைக் கண்டார் ஆவார். சிவனேடு ஒன்றிஇருக்கும் யோக நிலையினையும் கண்டவராவர். இவ்வாறு சிவனேடு ஒன்றி இருப்பதனல் ஏற்படும் சிவ சம்பந்தமான அழியா இன்பத்தையும் கண்டவர் ஆவர். ஆகவே செயலற்று நிஷ்டை நிலையில் இருப்பவர்தம் நிலையினை எப்படி விளக்கிக் கூறுவது?

(அ - சொ) துங்கி - நிட்டைசு டி. யோகம் இறைவனுேடு மனத்தை ஒன்றுபடுத்தி நிற்கும் நிலை. போகம் - இன்பம்.

(விளக்கம்) துரங்கும்போது என்ன நிகழ்கின்றன என்று அறியாது இருப்பதுபோலத் தியானநிலையில் உலக விடயங் கனே, உணராது இருத்தலின், அந்நிட்டையில் ஈடுபட்டிருந்த நிலையை, துரங்கி என்றனர். இதனையே துரங்காமல் தூங்கிச் சுகம் பெறுதல் என்பர் அனுபவ ஞானிகள்.

குருவின் திருவடி மாண்பு 37. திருவடி பேசிவம் ஆவது தேரில்

திருவடி பேசிவ லோகம் சிதிக்கில் திருவடி யேசெல் கதியது செப்பில் திருவடி பேதஞ்சம் உள்தெளி வோர்க்கே, (இ-ள்) நன்கு ஆராய்ந்து பார்த்தால் ஞானசிரியன் திருவடிகளே சிவமாக விளங்குவன. மேலும் அவற்றையே சிந்தித்தால் சிவலோகமும் அவையே ஆகும். அத்திருவடி