பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

1as

அக்கினி நகரத்தையும், முயலகனைத் திருவடியால் ஊன்றிய நிலை மகரத்தையும் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

இறந்தபோது வருவனவும் வராதவர்களும்

40. பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்

உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின்செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநட வாதே.

(இ - ள்) நல்வினை தீவினை என்னும் பொருள்களால் அடைக்கப்பட்ட இந்த உடம்பாகிய கூரை, அந்நல்வினை தீவினைகளை அனுபவிக்கவேண்டிய அளவுக்கு அனுபவித்து, உயிர் நீங்கியதும் பிணமாகப் பூமியில் விழுந்தபோது, அவ்வுடம்பின் உதவியால் உதவிகளைப் பெற்றுக் கொண்ட மனைவி மக்களாய் உள்ளவர்கள், அப்பினம் சுடலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டபோது, அப்பினமான உடம் பினின்று பிரிந்துபோன உயிர் சென்ற வழியே போகமாட் டார்கள். ஆல்ை, அவ்உயிர் உடலோடு கூடி இருந்தபோது மேற்கொண்ட விரதத்தால் ஆகிய புண்ணியமும், அறிவாகிய ஞான உணர்ச்சியும் மட்டும் ஒன்ருேடொன்று நெருங்கி அவ்வுயிருடன் வழிநடந்து செல்லும்.

(அ- சொ) பண்டம் - நல்வினை, தீவினையாம் சரக்கு. பெய் - நிரப்பப்பட்ட கூரை - உடம்பு. பழகி - அனுபவித்து பெண்டிர் - மனைவி. மண்டி - நெருங்கிச் சேர்ந்து. ヘン

(விளக்கம்) உடம்பைப் பெறுதல் நல்வினை தீவினைகளை அனுபவிப்பதற்கே ஆகும். அவ்வுடம் மணந்து மக்களைப் பெற்று நல்வினை தீவினைகளை அனுபவிக்கும். அவ்வுடம்புக்குரிய வருடைய துணையால் மனேவி மக்களும் இன்பம் ஆர்வர். அவர்கள் இன்பம் ஆர்தற்குத் துணையான உடம்பு பிணமாகிய