பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

శ్రీకి

போது அவ்வுடம்புடன் இன்பம் துய்த்த மனைவி மக்கள் உயிர் விடார். உடம்புடன் கூடிய உயிர் சென்றவழியும் செல்லார். ஆளுல், உடம்பிடைப்பட்ட உயிர் தேடிய விரதமும் ஞானமும் மட்டும் உடன் செல்லும். பற்றித் தொடரும் பாவமும் புண்ணியமும் என்பது ஞானிகளின் கருத்து. ஆக, இறந்தபின் உடன் வருவன, பாவம், புண்ணியம், ஞானம், விரதம் ஆதலின் நற்கருமமே புரிதல் வேண்டும் என்பது ஈண்டுக் கூறப்பட்டது.

பிணத்தை அடக்கம் செய்தபின் மக்கள் நடந்துகொள்ளும் விதம்

41. ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுக் சூரையம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி கினைப்பொழிந் தார்களே.

(இ - ள்) இறந்தபின் இறந்த உடலிடத்துத் தொடர்

புடையவர்களான ஊரார் எல்லாம் ஒன்றுகூடிப் பேர்ஒலி எழ அழுது, உயிரோடு கூடியபோது இருந்த பெயரை நீக்கிப் பிணம் என்னும் பெயரைச் சூட்டிச், செடி முளைத் திருக்கும் சுடுகாட்டில் எடுத்துச் சென்று சுட்டெரித்துப் பின் தீட்டு ஒழிய நீரில் குளித்து, சரீரம் நிலைக்காது. செல்வம் நிலைக்காது, வாழ்வு நிலைக்காது என்ற நினைப்பே இன்றி, வீணுக மக்கள் பொழுதைப் போக்குவர். * (அ சொ) சூரை ஒருவகைச் செடி. காடு - சுடுகாடு அல்லது இடுகாடு.

(விளக்கம்) இறந்த உடல் உயிர் உள்ளபோது பெற்றிருந்த பெயரை ஒழித்துப் பிணம் என்றே குறிப்பிடப்படும். உயிர் இருந்த உடல் பிணம் ஆனதைக் கண்டும், அதுபோல நாமும் ஒரு நாளைக்கு இவ்வாறு ஆவோமே என்ற நினைப்புக் கொள் ளாமல் வாழ்நாளை விளுக்குபவரை நோக்கியே, நினைப்பு ஒழிந்தார்களே எனப்பட்டது.