பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக்கழகத்

媒体

டாக்டர் டி எம் பி. மகாதேவன், எம். ஏ., பி எச். டி

சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் ஒன்ருன திரு மத்திரம் ஸ்தோத்திர நூலாகக் கருதப்படினும், சாஸ்திர துர்ல்ர்க்வும் விளங்கும் பெருமையுடையது. இதன் ஆசிரிய ராகிய திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் ஞான நிஷ்டையி விருந்து வருஷத்திற்கொரு பாசுரமாக மூவாயிரம் பாசுரங்கள் அடங்கிய திருமந்திரத்தை அருளிச்செய்தார் என்று கூறப்படு கித்து. இதனுல் நாம் தெரிந்து கொள்ளக்கூடிய உண்மை ஒன்று உண்டு. பொருளுணர்ந்தோ உணராமலோ பல்லாயிரக் கணக்கில் சொற்களைப் பேசுவது பொதுமக்கள் வழக்கம். ஆளுல், ஞானவான்களோ எனில், பலகாலும் ஞான திஷ்டையிலிருந்து எதைச் சொல்லவேண்டுமோ, எவ்வாறு சொல்லவேண்டுமோ அதை மட்டுமே சொல்பவர்களாவர். அவர்கள் கூறுவது உலக வாழ்க்கைக்கும் உறுதுணையாக அனிய்ேக் கூடுமெனினும், அவர்கள் நோக்கம் மக்கள் நிலையான இன்பத்தைப் பெறச் செய்வதாகும். ஆகையால், மக்கள் சிந்தித்துப் பார்க்கும் வகையில் அவர்களுடைய எண்ணத்தைத் தாண்டி, அவர்களைப் படிபடியாக உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும் வகையில், ஞானவான்களின் அறிவுரைகள் அமைந் திருக்கின்றன. வெளிமுகமாகச் செல்லும் ஆன்மாவை உள்முகப் படுத்தி, அங்கே இன்ப ஊற்றைக் கான்ச் செய்வது திருமூலர் போன்ற மஹர்ன்களின் உத்தேசம்.

உடம்பின் முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தன்ை கோயில் கொண் டான்என்று உடம்பின யானிருந்தோம்புகின் றேனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மந்திரம்.pdf/14&oldid=571191" இலிருந்து மீள்விக்கப்பட்டது