பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

143

(விளக்கம்) செல்வத்தைப் பெற்று வாழும்போதே அறச் செயலைச் செய்ய வேண்டும். தமக்குப் பின்னல் தம் சுற்றத்தார் செல்வத்தை நல்வழியில் பயன்படுத்துவார் என்று எதிர் பாாக்க இயலாது. அவர்கள் தமக்கு எவ்வளவு பங்கு உளது என்றுதான் எதிர் நோக்கி நிற்பர்.

இளமை கழிந்து மூப்பு ஏற்படும் அழியும் 49. கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே

விழக்கண்டும் தேருர் விழியிலா மாந்தர் குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில் விழக்கண்டும் தேருர் வியன்உல கோரே.

(இ - ள்) சூரியன் கிழக்கே தோன்றுகிருன். தோன்று கிறவன் மேற்கே சென்று மறைகிருன். இஃது எதைக் காட்டுகிறது? தோன்றிய ஒன்று, அப்படியே நிற்காமல் அழிவுறுகிறது என்பதைக் காட்டுகிறதன்ருே? இதனை நேரில் கண்டும் அறியாமல் இருக்கின்றனரே. மற்றும் ஒர் உதாரணங் கொண்டு இந்தப் பரந்த உலகில் உள்ளவர் இதனைத் தெளியலாமே. இளைய கன்ருனது இளமை யாகவே இல்லையே. மூப்பு அடைகிறது; கன்று என்னும் பெயர் போய் எருது என்னும் பெயரைப் பெறுகிறது. பிறகு சில நாட்களில் இறந்தும் விடுகிறது. இதனையும் உணர்ந்திலரே. -

(அ - சொ) ஞாயிறு - சூரியன். குழக்கன்று இளையகன்று. வியன் - பரந்த.

(விளக்கம்) சூரியன் தோற்றத்தையும் மறையும் நிலையினை

யும் தினம் தினம் கண்கொண்டு பார்த்தும்கூட, தோன்றிய

பொருளுக்கு அழிவு உண்டு என்பதை அறியாது இருத்தலின் விழியிலா மாந்தர் என்றனர்.