பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

144

தோன்றுவதைக் காண்கின்ருர்கள். அந்தப் பூங்கிளையில் உள்ள தளிரும் பூவும் அழிவதையும் காண்கின்ருர்கள். இதுகொண்டு உயிரும் தோன்றி அழியும் என்பதை அறிந் திலரே. தவறின்றி எம் தலைவனும் இறைவனைப் போற் றிலரே. அவர்கள் இயமன் வந்து அழைக்கின்ற போது என் செய்வது என்று அறியாது திகைப்புறுவர்.

(அ - சொ) தண்மலர் - குளிர்ந்தமலர். கொம்பு - கிளை. பிழைப்பு - தவறு. ஏத்தார் - போற்ருர்,

(விளக்கம்) உயிர் உடலைவிட்டு எப்போதாகிலும் பிரிந்து விடும். ஆகவே, உடலில் உயிர் உள்ளபோதே இறைவனை வணங்குதல் வேண்டும். வணங்கி இறைவன் திருவருள் பெற்ருல் இயமன் அழைக்கும்போது அஞ்சாமல் இருக்கலாம். தவிர்க்கப்படுவனவும், செய்யவேண்டுவதும் 52. அவ்வியம் பேசி அறங்கெட கில்லன்மின்

வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின் செவ்வியன் ஆகிச் சிறந்துண்ணும் போதொரு தவ்விக்கொ டுண்மின் தலைப்பட்ட போதே. (இ - ள்) வாழ்நாளில் பொருமை கொண்டு பிறரை இழித்துப் பேசித் தரும நெறி கெடும் முறையில் வாழா தீர்கள். மிகவும் கொடியணுகிப் பிறர் பொருள்மீது ஆசை கொண்டு அப் பொருளைக் கொள்ள விரும்பாதீர்கள். செம்மை சான்ற குணத்தினர் ஆகி நீங்கள் சிறப்புடன் உண்ணும் போது ஒர் அகப்பை உணவையேனும் ஏழைகள் வந்து கேட்டபோது கொடுத்து உதவுங்கள். -

(அ - சொ) அவ்வியம் - பொருமை. அறம்கெட - புண்ணியம் நீங்க. வெவ்வியன் - கொடியவன். வவ்வன்மின் - பிடுங்கிக்கொள்ளாதீர்கள். செவ்வியன் - நேர்மையானவன். தவ்வி - அகப்பை உணவு. தலைப்பட்டபோது - ஏழை நெருங்கிக் கேட்டபோது.