பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

145

(விளக்கம்) உயிர் நீங்குவது உண்மை ஆதலின், ஈண்டு மக்கள் தள்ளவேண்டுவன இவை என்றும்,கொள்ளவேண்டுவது இது என்றும் கூறப்பட்டன. வெவ்வியன் என்பதற்குப் பேராசை பிடித்தவன் என்றும் பொருள் கொள்ளலாம். ஐயம் இட்டு உண் என்பது இங்கு வற்புறுத்தப்படுகிறது.

உயிர்க்கொலை புரிபவர் நரகில் துன்புறுவர் 53. கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை

வல்லடிக் காரர் வலிக்கயிற் ருற்கட்டிச் செல்லிடு கில்லென்று தீவாய் நரகிடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே. (இ - ள்) கொல்லு, எறி, குத்து என்று கூறிய கொடிய மக்களை, இயமனது கட்டளை பெற்ற வன்மையான ஏவலாளர்கள், வன்மைமிக்க கயிற்றல் கட்டி, மேகத்தில் உண்டாகும் இடிபோல நில் என்று கூறிக் கொடிய நரகத் தில் இட்டு நிறுத்துவர்.

(அ- சொ) இடு - எறி. வல்லடிக்காரர் - எமனது ஏவல் பெற்ற வன்மைமிக்க ஆட்கள். செல் - மேகம். தீவாய் . கொடிய இடமாகிய,

(விளக்கம்) மாக்கள் என்பன மிருகங்கள். அம்மிருகங்கட்கு மன அறிவு கிடையாது. அறிவு பெருத காரணத்தால் மக்கள் உயிர் இனங்களைக் கொன்றும் குத்தியும் அழிக்கின்றனர். ஆதலின், அவர்களை மிருகங்களாக எண்ணவேண்டும் என்பைத குறிக்க மாக்கள் என்றனர். இதல்ை உயிர்க்கொலை கூடாது எனப்பட்டது.

இவை இவை பாதகம் எனல் 54. கொலேயே களவுகட் காமம் பொய்கூறல்

மலைவான பாதகம் ஆம்அவை நீக்கித் தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு இலேயாம் இவைஞான னந்தத் திருத்தலே.

த.-10