பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

147

பன்றியாகப் பிறப்பவர் யார் எனல் 56. கொன்றி லாரைக் கொலச்சொலிக் கூறிஞர்

தின்றி லாரைத் தினச்சொலித் தெண்டித்தார் பன்றி யாப்படி யில்பிறந் தேழ்நரகு ஒன்று வார்.அரன் ஆணைஇது உண்மையே. . (இ - ள்) கொல்லும் தன்மை இல்லாதவர்களைக் கொல்லும்படி சொல்லித் தூண்டினவர்களும், புலால் புசியாதவர்களைப் புசிக்குமாறு சொல்லி வற்புறுத்தித் தின்னுமாறு செய்தவர்களும், பூமியில் பன்றியாகப் பிறந்து, பின் ஏழ் நரகத்திலும் போய்ச் சேர்வர். இது சிவபெரு மான் ஆணையாகும். இது சத்தியம்.

(அ - சொ) தெண்டித்தார் வற்புறுத்தியவர்கள். படி - பூமி. ஏழ் - ஏழு. அரன் - சிவன். ஒன்றுவார். சேர்வார். ஆன. கட்டளை. -

(விளக்கம்) மலம் தின்னும் இயல்புடையது பன்றி. ஆதலின் அதன் பிறப்பு இழிவுடையதாயிற்று. அந்த இழி பிறப்புத் தீயவர்கட்கு ஏற்படும் என்பார், பன்றியாகப் படியில் பிறப்பர் என்றனர். பிறக்கவைப்பது இறைவனே ஆதலின் அரன் ஆணை என்றனர்.

பிறர் மனையாளை விரும்புதல் கூடாது 57. ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே

காத்த மனையாளைக் காமுறும் காளையர் காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக் கிடர்உற்ற வாறே. (இ- ள்) தொட்டுத் தாலி கட்டிய மனைவி வீட்டில் இருக்க, அவளே விட்டுத் தன்னைக் கற்பினல் காத்துக் கொண்டுள்ள பிறரது மனையாளை விரும்பும் இளைஞர்கள், நன்கு பழுத்த பலாப்பழத்தின் கனியை உண்ணுமல், ஈச்சம் பழத்தினை உண்ண, அதனைப் பெறுவதற்குத் துன்பம் அடைவது போன்றதாம்.