பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

$43

(விளக்கம்) இங்கு உதாரணம் மட்டும் காட்டப் பட்டுள்ளது. அதாவது இனிய மாம்பழத்ப் பெற்றும், புளிக்கும் பழத்தைப் பெற முயன்று துன்புறுவது என்பது உதாரணம். இந்த உதாரணத்தால் விளங்க வைப்பது யாதெனில், இனிய மனைவி இருக்கப் பொருத்த மற்ற பிறர் மனைவியை விரும்பி அதனல் துன்பம் அடைவது என்பதாம். மாங்கனி என்பது தான் மணந்த மனைவி; புளிமா என்பது பிறருடைய மனைவி. அறையில் யாரும் விதையினைப் புதையார். ஆகவே, ஈண்டு அறை என்பது வீட்டின் முன்னே அல்லது பின்னே உள்ள ஒர் இடத்தைக் குறிக்கும் சொல்லா இங்கு அமைந்துள்ளது. -

மாதரின் அழகைக் கண்டு மய்யல் கொள்ளல் கூடாது 59. இலகல ஆயினு: எட்டி பழுத்தால்

குலகல ஆம்கனி கொண்டுணல் ஆகா முலைகலம் கொண்டு முறுவல்செய் வார்மேல் விலகுறு நெஞ்சினை வெய்துகொள் வீரே. (இ - ள்) எட்டி மரத்தின் இலை பார்வைக்கு நல்லதாக இருந்தாலும், அம் மரத்தின் பழமும் பார்ப்பதற்கு நல்ல தாகக் காணப்பட்டாலும், தோற்றத்தால் இனிதாகக் காணப்படும் அப்பழத்தை உண்ணுதல் கூடாது. அது போலத்தான், முலையாகிய நலத்தைக் காட்டிப் புன்னகை செய்பவர் மீது மக்கள் நாட்டம் கொண்டு மனத்தைக் கொடுமைக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்ளாதிருப்பாராக. (அ - சொ) எட்டி - காஞ்சிரங்காய். வெய்து - வெம்மை шта;8).

(விளக்கம்) வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாறல் ஆகாது என்பது ஈண்டு வற்புறுத்தப்படுகிறது. இதற்கு உதாரணமாக எட்டிப் பழத்தின் அழகிய தோற்றம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மனம் குரங்குபோலத் தாவக் கூடியது