பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

#5;

(அ - சொர் நெறி . வழி. பிரணவம் - ஒம் என்னும் ஓர் எழுத்து மந்திரம். ஒர்ந்து -நன்கு ஆராய்ந்து உரை உபதேச மொழி. நால்வேதம் - நான்குவேதம். திரு - சிறந்த கிரியை செயல்முறை. சொரூபம் - சிவவடிவம். துகள் குற்றம்.

(விளக்கம்) ஐந்தெழுத்தாகிய பஞ்சாட்சர மந்திரம் தவிர்த்து ஏனைய மந்திரங்கள் யாவும் ஒம் என்னும் பிரணவத் தைப் பெற்றே உச்சரித்தற்கு உரியன. இது சேர்க்கப்படாது போயின் அவை உயிர் அற்ற மந்திரங்களே ஆகும். ஆகவே, ஏனைய மந்திரங்கட்குப் பிரணவம் இன்றியமையாதது ஆயிற்று. அதனை நன்கு உணர்தல் வேண்டும் என்பார் ஒர்ந்து என்றனர். எதையும் குரு அருளால் பெற வேண்டுதலின் குரு நெறியால் உரைகூடி என்றனர். இறைவன் கல்லால விருட்சத்தின்கீழ்ச் சனகாதி முனிவர்க்கு உணர்த்திய அறம், பொருள், இன்பம், வீடு என்பனவே ஈண்டு நால்வேதம் எனப்பட்டன. காயத் தொண்டே கிரியாத்தொண்டு எனப்படும். அது சிறந்த தொண்டாதலின் திருநெறியான கிரியை எனப்பட்டது. அப்பர் பெருமாளுர் தொண்டு கிரியாத்தொண்டு. மேலே காட்டிய நெறியில் நிற்பவர் சிவவடிவம் பெறுவது உண்மை. ஆகவே அவர்களைச்சொரூபமதானேர் என்றனர். மேற்சொன்ன நெறியைப் பின்பற்ருதவர் குற்றமுடையவர். பற்றியவர் குற்றம் அற்றவர். ஆதலின் துகள் இல் பார்ப்பார் எனப்பட் டார். இங்குக் கூறப்பட்ட தகுதிகள் அற்றவர் பார்ப்பார் எனக் கூறத்தகுந்தவர் ஆகார் என்பது நன்கு விளக்கப்பட்டது.

வேதாந்தம் ஆவது யாது?

66. வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்

வேதாந்தம் கேட்டும்தம் வேட்கை ஒழிந்திலர்

வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்திடம்

வேதாந்தம் கேட்டவர் வேட்கைவிட் டாரே.

(இ - ள்) வேதாந்த ஞானத்தைக் கேட்க விரும்பியவர் களான வேதியர்கள், வேதாந்தத்தைக் கேட்டும் ஆசையை டவில்லை. வேதாந்தமாவது ஆசை அற்ற இடமாகும்