பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

#56

ஆகவே உண்மையாக வேதாந்தம் கேட்டவர்கள் ஆசையை

ஒழித்தவரே ஆவார்.

- (அ - சொ) வேதாந்தம் - வேதத்தின் முடிந்த பொருள்'

வேதியர் - வேதம் உணர்ந்தவர். வேட்கை - ஆசை.

(விளக்கம்) வேதாந்தம் கேட்கப்படுவது ஆசையை

ஒழித்தற்காகும். ஆசையாவது மண், பெண், பொன் மீது

வைக்கும் பற்று.

பூனூல் தரித்தலும் குடுமி வைத்தலும் மட்டும் பிராம்மணியம் ஆகா 67. நூலும் சிகையும் நுவலில் பிரமமோ

நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.

(இ - ள்) பூணுாலும், குடுமியும் இருந்த அளவிலே இவை பிரம்மத் தன்மையை உண்ர்த்துவன என்று கூறத்தகுமோ? நூல் என்பது பஞ்சால் ஆன வெற்று நூல். நுண்ணிய முடி என்பது மயிர் ஆகும். ஆகவே, உண்மையில் நூல்எனப் படுவது வேதாந்த அறிவே ஆகும். துண்சிகை என்பது உண்மை அறிவே ஆகும். எனவே கூறப்புகுந்தால் நூலைத் தரித்த அந்தணர்கள் ஒவ்வொருவரும் மேல் சொன்ன உண்மையைக் காணுதல் வேண்டும். -

(அ - சொ) நூல் - பூணுால். சிகை - மயிர்முடி. துவலில் - கூறப்போளுல். பிரமமோ - பிராம்மணியமோ? கார்ப்பாசம் . பஞ்சு. (ஈண்டு அப்பஞ்சால் ஆகிய நூலை உணர்த்தி நிற்கிறது).

(விளக்கம்) பூணுாலும் முடியுமே பிராம்மணர் என்பதைக் காட்டா என்பது நன்கு விளக்கப்பட்டது. வேதாந்த உணர்வும் ஞானமும் உண்மைப் பிராம்மணியம் என்பது ஈண்டுக் கூறப் பட்டது. வெளித்தோற்றம் பயன் இல்லை என்பதும் விளக்கப் பட்டது.