பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

盈5?

பிராம்மணர் எனக் கூறத்தகாதவர் யார்?

68. சத்தியம் இன்றித் தனிஞானம் தான்.இன்றி

ஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப் பத்தியும் இன்றிப் பரன்உண்மை இன்றிப் பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே. (இ - ள்) சத்தியம் இன்றி, ஒப்பற்ற திருவடிஞானமாம் அறிவும் இன்றி, புலன்களால் நுகர்வதாகி ஆசையைவிட்டு ஆய்ந்து அறிய வேண்டிய உணர்வும் இன்றி, இறைஅன்பும் இன்றி, உண்மையாய் நித்தியமாய் உள்ள பொருள் இஃது என்று உணரும் உண்மை இன்றி, மயக்கம் கொண்டு திரியும் அறிவினர் பிராமணர் ஆகார்.

(அ - சொ) தனி - ஒப்பற்ற விடயம் -புலன் நுகர்ச்சியாம். வேட்கை. ஒரும் - உண்மையை ஆராயும். பரன் - மேலான இறைவன். பித்து பைத்தியம், மயக்கம்.

(விளக்கம்) பிறப்பால் மட்டும் தம்மைப் பிராம்மணர் எனக் கூறிக் கொள்வதில் பயன் இல்லை. சத்தியம், ஞானம், உணர்வு, பக்தி, பரன் உண்மை ஆகிய பண்பு இருக்கவேண்டும் என்பது விளக்கமுறக் கூறப்பட்டது.

அறிவிலா அரசன் இயமனுக்கு ஒப்பாவான்

69. கல்லா அரசனும் காலனும் நேர்ஒப்பர்

கல்லா அரசனில் காலன் மிககல்லன் கல்லா அரசன் அறம்ஓரான் கொல்என்பான் கல்லாரைக் காலன் கணுககில் லானே.

(இ - ள்) கல்வி அறிவு இல்லாத அரசனும் இயமனும் சமம் ஆவர். ஒரு விதத்தில் அரசனைவிட இயமன் மிக நல்ல வனும் ஆவான். கல்வி அறிவு இல்லா அரசன், தருமம் இன்னது என்பதை உணராமல், கொல் என்று உத்தரவு