பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

#ểg

(இ - ள்) கொண்ட வேடத்திற்கு ஏற்ப நடக்க வேண் டும். வேடம் பூண்டும் அந்நெறியில் ஒழுகாதவர் வேடம் பூண்டும் பயன் இல்லை. வேடநெறி நிற்பவரே உண்மை வேடத்தர் எனப்படுவர். வேடம் பூண்டும் வேடநெறிப்படி ஒழுகாதவர்களை வன்மைமிக்க மன்னன் வேடநெறியில் ஒழுகுமாறு செய்தால் அரசனும் வீடு அடைவன், வேடம் பூண்டவரும் வீடு அடைவர்.

(அ - சொ) வேடநெறி-மேற்கொண்ட வேஷ வழி. விறல். வன்மை. வீடு - மோட்சம். -

(விளக்கம்) துறவி வேடம் பூண்டவர் துறவிகட்குரிய ஒழுக்கத்தில் நில்லாராயின், வேடத்தால் பயன் இல்லைஎன்பார் வேடம் பூண்டு என்பயன் என்ருர். அரசன் தீய ஒழுக்கத்தினரை நல் ஒழுக்கத்தினராகச் செய்வது கடன் ஆதலின், வேந்தன் வேட நெறி செய்தால் எனப்பட்டது. இவ்வாறு செய்யும் ஆற்றல் அரசனுக்கு இருத்தலின், விறல் வேந்தன் எனப்பட் டான். நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே என்ருர் பிறரும்.

வேடத்தாரை ஒறுத்தல் வேந்தன் கடமை

72. மூடம் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்

வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்

பீடொன் றிலன்ஆகும் ஆதலால் பேர்த்துணர்ந்து

ஆடம் பரநூல் சிகைஅறுத் தால்கன்றே. - (இ - ள்) அறியாமையை ஒழிக்காமல் குடுமி பூணல் இவற்றை முதன்மையாகக் கொண்டு பொய்வேடத்தோடும் நாட்டில் தவசிகள் இருப்பின், நாடு கெடும்; பெருவாழ் வுடைய அரசனும் பெருமை என்பது இல்லாதவன் ஆவான். ஆகையால் இவற்றை மீண்டும் ஆராய்ந்து பொய்வேடத் தார் பூண்ட பூனூலையும், உச்சிக்குடுமியையும் பூணுதவாறு அறுக்கச் செய்தல் நல்லதாகும்.