பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

166

(அ - சொ) மூடம் - அறியாமை. சிகை - உச்சிக்குடுமி. நூல்-பூணுரல். புவி - பூமி. பீடு - பெருமை. பேர்த்து- மீண்டும்.

(விளக்கம்) பொய் வேடத்தார் நாட்டில் இருந்தால் நாடும் கெட்டு அரசனது பெருமையும் குறைதலின், அப்பொய் வேடத்தின் அறிகுறியான பூனூலும் உச்சிக்குடுமியும் பயன் இல்லை என்பது ஈண்டு விளக்கப்பட்டது.

அரசன் போலி வேடத்தாரை உண்மை வேடத்தார் மூலம் அறிந்துகொள்ள வேண்டும்

73. ஞானம்_இ லாதார் சடைசிகை நூல்கண்ணி ஞானிகள் போல கடிக்கின்ற வர்தம்மை ஞானிக ளாலே ஈரபதி சோதித்து ஞானமுண் டாக்குதல் கலம்ஆகும் காட்டிற்கே.

(இ - ள்) உண்மை அறிவு இல்லாதவர்கள் சடையை யும் குடுமியையும் பூணுரலையும் கொண்டு ஞானிகள் போல் நடிப்பர். அவர்களை உண்மை ஞானிகளைக் கொண்டு அரசன் சோதித்து அறிந்து, ஞானமற்றவர்களையும் ஞானம் உடையவராகச் செய்தல் நாட்டிற்கு நல்லதாகும்.

(அ - சொ) சிகை - மயிர்முடி. நூல் - பூணுரல். நண்ணி . நெருங்கப்பெற்று. நரபதி - மக்கள் தலைவனை அரசன்.

(விளக்கம்) பாம்பின் காலைப் பாம்பே அறிதல் போல, ஞானிகளால்தான் ஞானிகளை அறிய முடியும். ஆகவே பொய் ஞ்ஞானிகளை அறிய ஞானிகளே தகுதியினர். ஆதலின் ஞானிகளாலே சோதித்து என்றனர். அரசனும் ஒரு நரனே என்ருலும், அவன் நரர்கட்குத் தலைவனக இருத்தலின் அவன் நரபதி எனப்பட்டான். நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடன் என்பது தமிழ் நாட்டு மரபு; ஆதலின் ஞானம் உண்டாக்குதல் நரபதி கடன் எனக் கூறப்பட்டது.