பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

163

(அ - சொ) கால் - காற்று. ஈண்டுப் பிராணவாயு. கட்டுத லாவது பிராணயாமம் செய்தல். கனல் - மூலக்கணல். ஏற்றி - நடு நாடி வழியாக மேல் ஏற்றி. சோமன் - சந்திரன். மால் - மயக்கம். தேறல் - கள். மருளர் - மயக்கமுடையவர்.

(விளக்கம்) பிர்ாணுயாமம் செய்து மூல நாடி மூலம் மூலக் கனலை நடுநாடி மூலம் ஆதார தெய்வங்களின் வழியே ஏற்றில்ை அமிர்தம் ஒழுகும். அது பருகுதற்குரியது. ஈண்டுத் தியானவழியே இன்பம் நுகரலாம் என்பது விளக்கப் பட்டது.

சமய ஒழுக்கம் அற்றவர்களை அரசன்

தண்டித்தல் வேண்டும் 77. தத்தம் சமயத் தகுதிகில் லாதாரை

அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி எத்தண் டமும்செயும் அம்மையில் இம்மைக்கே மெய்த்தண்டம் செய்வதவ் வேந்தன் கடனே. (இ- ள்) அவர் அவர்கள் மேற்கொண்ட சமயமார்க் கமாம் தகுதியில் நிற்காதவரைத் தந்தையாகிய சிவபெரு மான் கூறிய ஆகமசாத்திர முறைப்படி அடுத்த பிறவியில் எந்த விதமான தண்டனைகளும் சிவனுல் செய்யப்படும். ஆனால், இப்பிறப்பில் சமயநெறி நில்லாதவன் உடலுக்கு ஊறு உண்டாகும் வழியில் தண்டித்தல் அரசன் கடமை யாகும்

(அ - சொ) அத்தன் தந்தை. நெறி முறை. அம்மை . அடுத்த பிறவி. இம்மை - இப்பிறவி. மெய் -சரீரம்.

(விளக்கம்) அவர் அவர்கள் மேற்கொண்ட சமயநெறியில் ஒழுகவேண்டும் என்பது விளக்கப்பட்டது. ஒழுக்கம் தவறியவர்களை அடுத்த பிறவியில் இறைவன் தண்டிங்பான் என்ருலும், சமய ஒழுக்கம் தவறியவர்கள் இப்பிறவியிலேயே தண்டிக்கப்பட வேண்டியவர் என்பது விளக்கப்பட்டது.