பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165

i55

உண்ணுதிர்கள். காக்கை தன் இனத்தை அழைத்து உண்ணும் காலத்தையும் அறியுங்கள்.

(அ - சொ) ஆர்க்கும் . எவர்க்கும். என்னன்மின் என்று சொல்லாதீர். போற்றன்மின் - பாதுகாத்து வைக்காதீர். வேட்கை ஆசை. ஒல்லை - விரைவாக.

(விளக்கம்) கொடுக்கும்போது இன்னுருக்குத்தான் கொடுக்க வேண்டும், இன்னுருக்குக் கொடுக்கக் கூடாது என்று கருதாமல் கொடுக்க வேண்டும் என்பதை விளக்கவே, "ஆர்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்' என்றனர். நாம் உண்பதற்கு முன் எவரேனும் வருகின்றனரா என்று பார்த்து உண்ண வேண்டும் என்று கூறினர். ஒரு வேளை பழைய பொருளையும் கொடுக்க நேரும். ஆதலின், பழம் பொருள் போற்றன்மின் என்றனர். நிதானம் போஜன ஸ்தானம் ஆதலின் விரைந்து உண்ணுதிர் என்றனர். உண்ணும் போது தனித்து உண்ணலாகாது கூடியே உண்ண வேண்டும் என்பதை விளக்கவே காக்கை இனத்தைக் காட் டினா.

அறத்தை எந்த வகையிலேனும் செய்யலாம் 80. யாவர்க்கும் ஆம்இறை வற்கொரு பச்சில யாவர்க்கும் ஆம்பசு வுக்கொரு வாய்உறை யாவர்க்கும் ஆம்உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கும் ஆம்பிறர்க் கின்னுரை தானே. (இ - ள்) இறைவனை ஒரு பச்சிலையிட்டு வழிபடல் எல் லாராலும் செய்யக்கூடியதாகும். பசுவுக்கு ஒருவாய் உணவு கொடுத்தல் எவராலும் முடியக்கூடியதாகும். ஒரு கைப்பிடி உணவினை ஏழைகட்கு இட்டு உண்ணுதல் யாவர்க்கும் இயலும் செயல் ஆகும். பிறரிடம் இனிய மொழிகளைப் பேசுதல் யாவர்க்கும் செய்யக்கூடிய செயலாகும்.

(அ - சொ) ஆம் - ஆகக் கூடியது. வாயுறை - உணவு: ஈண்டுப் பச்சைப்புல்லை உணர்த்தி நிற்கிறது.