பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

#66

(விளக்கம்) இறைவனை மகிழ் விக்க ஒரு பச்சிலை இட்டு வழி பட்டாலே போது 1ானது; இனிய உரையினைப் பேசுதல் கடினம் அன்று. ஆகவே, இனிய உரையினையே பேசுதல் வேண்டும். - செல்வம் உள்ளபோதே அறம் செய்க 81. அழுக்கினை ஒட்டி அறிவை கிறையீர் தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர் விழித்திருந் தென்செய்வீர் வெம்மை பரந்து விழிக்க அன் றென்செய்வீர் ஏழைநெஞ் சீரே. (இ) - ள்) இரங்கத்தக்க ஏழை மனம் பெற்ற மக்களே! ஆணவமாகிய அழுக்கினை ஏறத்தள்ளி, மெய்ஞ்ஞான அறிவால் நிறைந்திருக்க வில்லையே. கல்வி, செல்வம் முதலானவை உங்களைத் தழுவி இருக்கும் நாளில் அறத்தைச் செய்யாமல் இருக்கிறீர்களே! கண்கொண்டு பார்த்திருந்தும் என்ன செய்வீர்கள்? நீங்கள் செய்துள்ள கொடிய பாவங்கள் சூழ்ந்து உங்களை நிலையினின்று தள்ளுமே, அப்போது என்ன செய்வீர்?

(அ - சொ) அழுக்கு - ஆணவமலம். தழுக்கியது - கல்வி செல்வம் இளமை கூடிய, வெம்மை - கொடிய தீவினைகள். இழிக்க - கீழே தள்ள.

(விளக்கம்) இளமை, செல்வம், கல்வி அறிவு ஆகிய இவை உள்ளபோதே, தருமம் செய்யவேண்டும் என்பது கூறப் பட்டது. அழுக்கினைப்போக்கப் போக்க அது மீண்டும் மீண்டும் சேரும். ஆணவமும் அத்தகையது, ஆகவே, ஆணவம் அழுக்கு எனப்பட்டது.

எமன் எவரையும் விடான் 82. தன்னை அறியாது தான்கல்லன் என்னுது இங்கு இன்மை அறியாது இனேயர்என்று ஒராது வன் ைநயில் வந்திடும் கூற்றம் வரும்முன்னம் தன்மையில் நல்ல தவம்செய்யும் நீரே,