பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

#&

பணத்தைச் சேர்ப்பவர் பட்டிகள் என்றும் பாதகர் என்றும் ஈண்டு இகழப்பட்டனர்.

அறம் அழியாது ஆதலின் அறம் செய்க 84. ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின கழிந்தன கற்பனை நாளும் குறுகிப் பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை அழிந்தன கண்டும் அறம்அறி யாரே. . (இ - ள்) காலங்கள் ஒழிந்தன. ஊழிக் காலங்களும் போயின. எண்ணங்கள் யாவும் கழிந்தன. நாட்களும் சுருங்கின. பெரிய துன்பத்திற்குக் காரணமான உடம்பும் சக்கைபோலப் பிழியப்பட்டது. ஆகவே, இவைகள் எல்லாம் நாளும் நாளும் அழிவுறுவதைக் கண்டும், மக்கள் உயிர் உள்ளபோதே அறத்தைச் செய்யவேண்டும் என்பதை அறிந்திலரே. .

(அ சொ) ஊழி - பல ஆண்டுகள் சேர்ந்த ஒரு காலம். கற்பனை - எண்ணங்களாகிய ஆகாயக் கோட்டை இடர் - துன்பம்.

(விளக்கம்) மக்கள் உலகில் யாவும் கண்கூடாக அழி வதைப் பார்த்தும், அறம் செய்யாமல் இறக்கின்றனரே என்று இரக்கப்பட்டுக் கூறப்பட்ட மந்திரம் இது.

அறம் அறியாதார் பகைகொண்டு வாழ்வர் 85. அறம் அறியார் அண்ணல் பாதம் கினையும் திறம்அறி யார்சிவலோக நகர்க்குப் புறம்அறி யார்பலர் பொய்ம்மொழி கேட்டு மறம்அறி வார்பகை மன்னிகின் ருரே. (இ - ள்) யார் ஒருவர் அறத்தை அறியாது இருக்கிருர் களோ, அவர்கள் இறைவனது திருவடிகளை நினையும் வழி வகைகளை அறியாதவர் ஆவார். சிவலோக தாதரின் வெளிப்புறத்தைக்கூட அறியமாட்டார். ஆணுல், பிறரது