பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

!

ஜாதகனுக்குத் தீங்கினைத் தரும். அதனை உட்ெ காண்டே உரோகிணி நட்சத்திரத்தின்மீது வைத்துக் கூறினர்.

நரகத்தில் சேர்வார் இவர் இவர் எனல் 87. பரவப் படுவான் பரமனை ஏத்தார்

இரவலர்க் கீதலே ஆயினும் ஈயார் கரகத்தால் நீர்அட்டி காவை வளர்க்கார் நரகத்தில் நிற்றிரோ கல்நெஞ் சீரே ,

(இ - ள்) நல்ல மனம் படைத்தவர்களே! எல்லாராலும் தொழப்படுபவராகிய சிவபெருமானை வனங்காராகித் தம்மைவந்து யாசித்த யாசகர்கட்குக் கொடுக்கக்கூடிய தையும் ஈயமாட்டாராகிக் குடத்தில் நீர் கொண்டு பாய்ச்சிச் சோலையையும் வளர்க்கமாட்டாராகி இருப்பின், நீங்கள் கடைசியில் நரகத்தில் சென்று இருப்பீரே!

(அ - சொ) பரவ - வணங்க, பரமன் - சிவபெருமான். ஏத்தார் வணங்கார். இரவலர் - யாசகர். கரகம் - குடம். அட்டி - முகந்து. கா - சோலே.

(விளக்கம்) நல்நெஞ்சீர், என்றது புகழ்வது போலப் பழிப்பதாகும். இதல்ை அறம்செய்யார் நரகம் புகுவர் என்பது விளக்கப்பட்டது.

அற்பரைப் பாடாது அரனைப் பாடுக 88. செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்

புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல் இல்லம் கருதி இறைவனை ஏத்துமின் வில்லி இலக்கெய்த வில்குறி ஆமே. (இ - ள்) சிலராகவோ பலராகவோ வாழும் செல்வம் படைத்த அற்ப அறிஞரைச் செல்வம் காரணமாகப் போற்றிப் புக ழா ம ல், மோட்சமாகிய வீட்டுச் செல்வத்தைக் கருதிச் சிவமாம் இறைவனைப் போற்றிப் புகழுங்கள். வேடன் குறிவைத்து வில்லில் அம்பு பூட்டி