பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

f7;

அங்ங்ணம் சிவத்திற்கும் தமக்கும் வேறுபாடு கருதாத காரணத் தால்தான், இறைவன் கண்ணில் தம் கண்ணை இடந்து அப்பினர்.

அன்புடன் குழைந்தால் ஆண்டவனே அடையலாம் 90. என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்

பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகம்குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்தஒண் ணுதே. (இ - ள்) எலும்பையே விறகாக இட்டு, தசையின் அறுத்துப்போட்டு, பொன்வடிவமான தீயில் பொரியும்படி வறுத்தாலும், இறைவனை அடைய முடியாது. ஆனால், அன்புடன் உள்ளம் உருகுபவர்கள் என்னைப்போல மன மணியாகிய இறைவனை அடையலாம்.

(அ - சொ) என்பு - எலும்பு. இறைச்சி - உடம்பில் உள்ள தசை. கனல் - நெருப்பு. அகம் . மனம் குழைவார். உருகுவார். மணி - மனமாகிய மணி. எய்த ஒண்ணுது . அடைய இயலாது.

(விளக்கம்) தவம் செய்பவர், உடல் தசைகளை அறுத்துத் தவம் செய்வர். சூரபதுமன் இவ்வாறு தவம் செய்தனன். பசுவை வேட்டு யாகம் செய்தலும் உண்டு. ஆதலின் இறைச்சி அறுத்திட்டுப் பொரிய வறுப்பினும் என்ருர் எனலும் ஒன்று. யாகமும் தவமும் செய்தாலும், இறைவனை அடைய முடியாது. இறைவனிடத்தில் உள்ளம் உருகி அன்புடன் இருந்தால் அவனே அடையலாம்.

பக்தர்க்கே பரமன் முன்னின்று அருள்வான் 91. உற்றுகின் ருரொடும் அத்தகு சோதியைக் சித்தர்கள் என்றும் தெரிந்தறி வார்.இல்லை பத்தி மை யாலே பணிக்தடி யார்தொழ முத்தி கொடுத்தவர் முன்பு நின்றனே.