பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

175

கேட்டும், தேவர் மந்திரங்களைக் கேட்டும் பிற நூல்களைக் கேட்டும். பொன் என்று கூறத்தக்க திருமேனியுடைய எம் இறைவன் இயல்புகளைக் கேட்டும், பெறக்கூடியது சிவகதியே ஆகும்.

(அ - சொ) வாய்மொழி - அறிவுரை. மறம் - பாவ ம். வானவர் - தேவர். புறம் - பிறநூல் கருத்துக்கள். மேனி . உடம்பு. திறம் - இயல்பு.

(விளக்கம்) சிவகதி அடையப் பலவகைக் கேள்வி ஞானம் தேவை எனப்படுகிறது. இவற்றின் பெருமையையும் சிவகதியின் மாண்பையும் அறியப் பிற நூல் கேள்வியும் தேவை என்பதைப் புறம் கேட்டும் என்ருர். இறைவன் தி வண்ணன் ஆதலின் அவன் மேனிக்குப் பொன் உவமை ஆயிற்று.

கல்லார் மனத்திற் கலவான் கடவுள் 95. நில் லா நிலையை நிலையாக நெஞ்சத்து

நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்கள் எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும் கல்லார் நெஞ்சத்துக் காண ஒண் ளுதே. (இ - ள்) நில்லாதனவற்றின் நிலையை நிலையாக நிற்பன வாகக் கொண்ட மனமுடையவர்களே! நிற்காத உடம்பை யும் நிலை என்று உணரும் மக்களே! இறைவன் எல்லா உயிர்க்கும் தலைவன்தான். என்ருலும் கல்வி அறிவு இல்லாதவர் மனத்தில் அவனைக் காணமுடியாதே.

(அ - சொ) குரம்பை - உடம்பு. {விளக்கம்) அறிவு வளராத காரணத்தாலும், மருள் மிகுந்த காரணத்தாலும், உலகப் பொருள்கள் நிலையற்றவை என்பதை அறிந்தும் நிலையுள்ளனவாகவே தோன்றும். கல்வி அறிவு இருந்தால் இந்தவாறு தோன்ருது. மேலும், இறைவன் எல்லா உ யி ரி னி ட த் து ம் இருப்பவனுயினும், கல்வி அறிவு இல்லாதவரிடத்தில் காணப்படான். அங்கு இருந்தாலும்