பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

176

மறைந்தே இருப்பான். இது குறித்தே அனுபவ சூானிகள்

கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன், கல்லாதார் மனத்தனுகாக் கடவுள் என்றனர். அவன் சுற்றவர் விழுங்கும் கற்பகக் கணி.

கயவர் என்பர் கல்லாதவரே

96. கில்லாது சீவன் நிலையன்றெனஎண்ணி

வல்லார் அறுத்தும் வத்துளும் ஆயிஞர் கல்லா மனித்தர் கயவர் உலகினில் பொல்லா வினைத்துயர் போகம்செய் வாரே.

(இ - ள்) உயிர் உடலில் நிற்காது. அது நிலையற்றது என்று சிந்தித்துக் கல்வியில் வல்லவர்கள் அறஞ்செய்த லிலும் தவம் செய்தலிலும் ஈடுபடுவார் ஆயினர். ஆணுல், கல்லா மனிதர்களோ எனில், கீழ்மக்களாக வாழ்ந்து உலகில் தீய செயல்களில் ஈடுபட்டுத் துன்பத்தை அனுபவிப்பார்; சிற்றின்பத்தில் ஈடுபட்டு நிற்பார்.

(அ - சொ) வல்லார் - கல்வியறிவில் வல்லவர். கயவர். கீழ் மக்கள். வினை - தீவினை. போகம் - சிற்றின்பம்.

(விளக்கம்) வல்லார் என்பதற்குப் பிறப்பற முயலும் அறவோர் என்றும் பொருள் காணலாம்.

கல்லாரைக் காணவும் கூடாது

97. கல்லாத மூடரைக் காணவும் ஆகாது

கல்லாத மூடச்சொல் கேட்கக் கடன் அன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் கல்லராம் கல்லாத மூடர் கருத்தறி யாரே.

(இ - ள்) கல்லாத மூடரைப் பார்க்கக் கிட்டாது. கல்லாத மூடர்களின் வார்த்தைகளைக் கேட்டல் நம் கடமையாக இருக்கக்கூடாது. கல்லாத முடர்கட்கு அவர்