பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

慧酸盛

மும்மல எரிப்பே முப்புர எரிப்பு

104. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புரம் ஆவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யார்அறி வாரே.

(இ - ள்) கங்கையாகிய நீரைத் தன் செம்மையான சடையில் தாங்கியுள்ள முதன்மையானவனும், பழமை யானவனும் ஆன இறைவன், மூன்று கோட்டைகளே அழித் தனன் என்று மூடர்களே கூறுவர். முப்புரம் என்பன மூன்று கோட்டைகள் அல்ல. அவை ஆணவம், கன்மம், மாயை ஆகிய இவற்றின் காரியமாய் அமைந்தவை. இங்ங்னம் இருந்தும், இறைவன் அந்த மும்மலமாகிய கோட்டையை அழித்தான் என்பதை யார் அறிவார்? எவரும் இலரே!

(அ சொ)அப்பு - நீர்; (ஈண்டு கங்கையாறு). ஆதி - முதல். புராதனன் - மிகப்பழையன். முப்புரம் - மூன்று கோட்டைகள். செற்றனன் - அழித்தனன். மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை. புரம் - கோட்டை, எய்தமை- அழித்தமை.

(விளக்கம்) பகீரதன் தன் முன்னேர்கள் நரகத்தில் இருப்பது அறிந்து, அவர்களை மோட்ச உலகு சேர்க்க ஆகாய கங்கையைக் கொணர்ந்து, அவர்கள் மீது பாயுமாறு செய்யத் தவம் செய்தான். அக்கங்கை வேகமாக வர, அவ்வேகத்தை இறைவன் தடுத்துத் தன் சடையில் அதனை வைத்துக் கொண்டனன். இதுவே அப்பணி செஞ்ச ைட எனப்பட்ட தற்குக் காரணம். கமலன், கமலாட்சன் வித்யுன்மாலி என்பவர் வெள்ளி, பொன், இரும்பாலாகிய கோட்டையுடைய வர்கள். அக்கோட்டைகளை இறைவன் சிரித்தே அழித்தான்.