பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

1ss

ஈசன் அரியன் அல்லன் எளியனே

105. திரிகின்ற முப்புரம் செற்ற பிரான

அரியன்என் றெண்ணி அயர்வுற வேண்டா பரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன் பரிவொடு நின்று பரிசறி வானே.

(இ - ள்) நடமாடும் கோட்டைகளான மூன்றையும் அழித்த இறைவன், அணுகுதற்கு அரியவன் என்று எண்ணிச் சோர்தல் வேண்டா. யார் ஒருவர் அவனிடம் அன்புடையவரோ, அவர்கட்குப் பொய்ப் பொருளாக உள்ளவன் அல்லன்; உண்மைப் பொருளாக இருந்து அருள் செய்வான். அன்புடன் அவர்கள் கண்முன் நின்று, அவர்களின் தன்மை உணர்ந்து அருள் செய்வான்.

(அ - சொ) செற்ற - அழித்த, முப்புரம் - மூன்று கோட்டைகள். அரியன் - அருமையானவன். அயர்வு - சோர்வு. பரிவு - அன்பு. பரிவு - கருண. பரிசு - தன்மை.

(விளக்கம்) இறைவன் அரியயிைனும் அன்பர்கட்கு எளியன் என்பது இங்குக் கூறப்பட்டது.

அரன் அருள் இன்றி அழிந்தவர்கள்

106. அரிபிர மன்தக்கன் அருக்க னுடனே

வருமதி வாலை வன்னிகல் இந்திரன்

சிரமுகம் காசி சிறந்தகை தோள்தான்

அரன் அருள் இன்றி அழிந்தகல் லோரே.

(இ . ள்)திருமாலும், பிரமனும், தட்சனும், சூரியனும், சந்திரனும், யாகசாலையின் காவல் தெய்வமும், அக்கினி யும், இந்திரனும், தலை, முகம், மூக்கு, கை, தோள் ஆகிய இவற்றைச், சிவபெருமான் அருள் இல்லாமையால், அழித்த நிலைபெற்ற நல்லவர்கள்,