பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

iஇத்

(அ - சொ) அரி - விஷ்ணு. அருக்கன் - சூரியன். மதி. சந்திரன். வாலை - யாகசாலைக்காவல் தெய்வம்) வன்னி. அக்கினி. நாசி - மூக்கு. அரன் - சிவன்.

(விளக்கம்) தட்சன் பாகம் செய்தான். அவ் யாகத்திற்குத் தக்கன் எல்லாத் தேவர்களையும் அழைத்திருந்தான். ஆனல் யாககர்த்தாவான சிவனை அழைத்திலன். அதனால் இறைவன் வீரபத்திரக் கோலத்தில் தட்சன் யாகத்தை அழித்தனன். அதுபோது தேவர்கள் மேலே கூறியவாறு வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டனர். வாலை என்பது தக்கன் மனைவியையும் குறிக்கும், தேவர்கள் இறைவனுல் தண்டனை பெற்றமையின் அவர்களை அழிந்த நல்லோர்’ என்றனர்;

உலக முடிவில் உள்ளவன் சிவனே

10. ஒருவரை மூடிக் கலக்தெழும் வெள்ளத்

திருவரும் கோஎன் றிகல இறைவன் ஒருவனும் நீர்உற ஒங்கொளி ஆகி அருவரை பாய்கின் றருள்புரிந் தானே.

(இ - ள்) ஊழிக்காலத்தில் கரிய மலைகள் மூழ்க, எங்கும் நீர்ப்பெருக்குப் பரவி இருக்க, இந்த நிலையில் அகப் பட்ட பிரமன் திருமால் இருவரும் கோ என்று மாறுபட்டுக் கதற, இறைவன் ஒருவனே அவ் வெள்ளத்தின் நடுவே உயர்ந்து ஓங்கிய ஒளிவடிவமான மலையாய் நின்று அருள் புரிந்தான்.

(அ - சொ) வரை - மலை. இருவர் - பிரம்மா, விஷ்ணு. இகல - மாறுபட்டுநிற்க.

விளக்கம்) பிரளயம் என்பது பலவகைப்படும். உலகம்

முடியும் கால மே பிரளயமாகும். ஈண்டுநீரால் உலகு அழிவதைக் கூறினர். அதுபோது எங்கும் வெள்ளநீர் பரந்து