பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

185

காணப்படும். அதில் பிரமனும் விஷ்ணுவும் அகப்பட்டதல்ை தான் கோ என்று அலறினர். அதில் அவர்கள் மறைந்த வர்களே. அவ்வெள்ளத்தில் உயர்ந்து ஓங்கி நின்றவன் இறைவனே ஆவான்.

இறைவன்சக்கரத்தைத் திருமாலு க்கு ஈந்து அதனைத் தாங்கும் வன்மையையும் அருளிச்செய்தான்

108. சக்கரம் பெற்றுகல் தாமோதரன்தானும்

சக்கரம் தன்னத் தரிக்கஒண் ணு மையால் மிக்கான் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத் தக்ககல் சத்தியைத் தான்கூறு செய்ததே.

(இ - ள்) நல்ல தாமோதரனை திருமால் இறைவ னிடம் சக்கரம் பெற்றனன் என்ருலும், அச்சக்கரத்தைத் தன் கையில் தாங்க ஒண்ணுது தத்தளித்தனன். அதன் பொருட்டுத் தன்னினும் உயர்ந்த சிவபெருமான், தனது ஒரு பகுதியாகிய சக்தியை அந்தத் திருமாலுக்கு ஈந்து சக்கரத்தைத் தாங்கும் திருவருளையும் பாலித்தனன்.

(அ - சொ) தாமோதரன் - திருமால். ஒண்ணுமை . முடியாமை. அரசன் - சிவன். அர்ச்சிக்க - வழிபட மிக்கு - உயர்ந்த கூறு - பகுதி.

(விளக்கம்) சலந்தராசுரன் என்பவனை அழிக்கச் சிவபெருமான் பூமியில் தன்கால் பெருவிரலால் ஒரு வட்டம் இட, அது சக்கர வடிவமாகி அவனேக் கொன்றது. திருமால் அச்சக்கரத்தைப்பெற ஆயிரந்தாமரை மலர்களைக் கொண்டு இறைவனே அருச்சிக்கையில் ஒரு மலர் குறையுமாறு இறைவன் செய்தனன். அந்நிலையில் திருமால் தன் கண்ணே இடந்து தாமரை மலராக எண்ணி அர்ச்சனை செய்தனன். அதனல் சிவன் திருமாலின் அன்பைப் பாராட்டிச் சக்கரத்தைத் திருமாலுக்குக் கொடுத்தனன்.