பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

188

இறைவன் எலும்பும் கபாலமும் ஏந்தித் தானே தேவதத்தன் என்பதை உணர்த்து கிருன் 109. எலும்பும் கபாலமும் ஏந்தி எழுத்த

வலம்பன் மணிமுடி வானவர் ஆதி எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில் எலும்பும் கபாலமும் இற்றுமண் ஆகும். (இ - ள்) இறைவன், உலகம் அழியும் காலத்தும் அழியாது இருப்பவன். அழிந்த தேவர்களின் எலும்பை யும் மண்டை ஒட்டையும் ஏந்தி நிற்பவன். இதல்ை அவன் வீரருள் வீரன் ஆவான். இரத்தின கிரீடம் அணிந்த தேவர்கட்கெல்லாம் ஆதியும் ஆவான். இறந்த தேவர் களின் எலும்பையும் மண்டை ஒட்டையும் ஏந்திலன் என்ருல், அவை இற்று மண்ணுெடு மண்ணுகிப் போகும். (அ - சொ) கபாலம் - மண்டை ஒடு. வலம்பன் - வீரர் கட்குள் வீரனை சிவன். ஆதி - முதல்வன். வானவர் . தேவர். இற்று - ஒடிந்து துகளாகி. - (விளக்கம்) இறைவன் ஒளிவடிவினன் ஆதலின், அவன் முடியும் ஒளியுடை மணிமுடியாயிற்று. அழிந்த தேவர் கட்குப் பின்னே பிறக்கும் தேவர்கட்கும் அழிவு உண்டு என்பதைக் காட்டவும், எல்லாம் அழிந்தாலும் தான் மட்டும் அழியாத பரம்பொருள் என்பதைக் காட்டவுமே, எலும்பும் கபாலமும் ஏந்தி இறைவன் விளங்குகின்ரு ன் என்பது இங்குக் கூறப்பட்டது. இவ்வாறு ஏந்திக் காட்டவில்லை என்ருல் பின் வந்தவர்கள் தமக்கு அழிவு உண்டு என்பதை உணராமல் தருக்குடன் திரிவர் என்க.

அரியும் அயனும் அரனைக் காளுர் 110. பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்

பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க அரன்அடி தேடி அரற்றுகின் ருரே.