பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

t 移 恕 斜 熔 - 今 1. தமிழ் மந்திரம் உண்டா?

நம் இந்தியா தேசத்து மக்களுக்கு ஒரு தவருண எண்ணம் இருந்து வருகிறது. அதாவது மந்திரம் என்பது ஒரு குறிப் பிட்ட மொழியில் அமைந்ததுதான் என்பதும், அதுவும் அம் மந்திரம் வட மொழியில்தான் உண்டு என்பதும் ஆகும். இவ் வெண்ணம் தவருண எண்ணம், மந்திரத்தின் இலக்கணம் கூறவந்த தொல்காப்பியர்,

நிறைமொழி மாக்தர் ஆணையில் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப

என்றனர். இத் தொல்காப்பியம் தமிழர்களுடைய மிக மிகத் தொன்மை வாய்ந்த நூல். கிறித்துப் பிறப்பதற்கு முன் பல்லாயிர ஆண்டுகட்கு முன்தோன்றிய நூல். அகத்திய முனிவரது மாணவரான தொல்காப்பியர் செய்தது தொல் காப்பியம் ஆதலின், அதன் தொன்மையைக் கூறவும் வேண்டுமா? இதன் காலத்தை அறிய அவாவுவோர், யான் எழுதியுள்ள தமிழ் நூல் வரலாறு' என்னும் நூலில் காண் பாராக.

மேலே காட்டிய நூற்பாவின் பொருள், எல்லாப் பண்பு களும் நிறைந்து மொழியவல்ல பெருமக்கள், ஆணையிட்டுக் கூறிய வாய்மொழிகள் யாவும் மந்திரம் ஆகும் என்பதாம். இந் நூற்பாவில் இன்ன மொழியில்தான் மந்திரம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடாமையினை உணரவும். ஆனல், சொல்பவர் இன்னுராய் இருக்கவேண்டும்,என்னும் குறிப்பு மட்டும் இருப்பதை நோக்கவும். அதாவது, மந்திரம் கூறுபவர் நிறைமொழி மாந்தராகவும், ஆணையில் கூறுபவராகவும் மட்டும் இருக்கவேண்டும் என்பது புலளுகிறது. இக் கருத்தை நன்கு வற்புறுத்துவார் போன்று, திருவள்ளுவரும்,

த.-2