பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

iĝż

(இ - ள்) இறைவன் கையில் உள்ள மழுவென்னும் தீ பரந்த இடத்தை சுட்டு அழித்தது. அலேகள்ேயுடைய கடலைச் சுட்டது. அரக்கர்களேச் சுட்டது. ஆகவே அதுவே ஈசன் அம்பாகும்.

(அ- சொ) அங்கி - தீ. அகல் - பரந்த இடம் - பூமி. அசுரர் - இராட்சதர். -

(விளக்கம்) மகா பிரளயமானது தீயில்ை ஏற்படும். அப்போது மண்ணகமும் கடலகமும் சுட்டு எரிக்கப்படும். வன்மை மிக்கவர் என்று செருக்குற்றுத் திரியும் அரக்கர்களும் சுட்டு எரிக்கப்படுவர். ஆகவே இறைவனுக்கு அம்பு என்பது ஒன்று வேண்டா. நெருப்பே அம்புபோல வேலை செய்யும்.

இறைவன் உயிரோடு கலந்து இருந்தும் அஃது தன்னை அறியாது.

118. உள்ளத் தொருவன உள்ளுறு சோதியை உள்ளம்விட் டோடி நீங்கா ஒருவன உள்ளமும் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருவறி யாதே.

(இ. ள்) உயிருக்கு உயிராய் உள்ளத்து ஒளிரும் இறைவனை, உள்ளத்தை விட்டு ஒர் அடிகூடவிட்டு நீங்காத ஒப்பற்ற இறைவனே, உள்ளத்து அவனும் உயிரும் உடய்ை இருப்பினும், உள்ளமானது அந்த வடிவை அறியவில்லையே.

(அ - சொ) உறு - பொருந்திய உள் - மனம்.

(விளக்கம்) இறைவன் இன்றி உடல் உயிர் இல்லை. அவன் உள்ளத்தில் உறைந்தே நிற்கின்ருன். ஒளிவடிவாகவும் உள்ளான். அப்படி இருந்தும் அவ்வடிவை உயிர் அறிந்து கொள்ள முடியவில்லை. இதற்குக் காரணம் மறைப்பு என்னும் சக்தி ஆகும்.