பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

195

கட்டி - சுருக்கி. கண்ணுதல் நெற்றிக்கண்ணுடைய இறைவன்,

(விளக்கம்) உலகம் ஐம்பூத இணைப்புடையது. அதுபோல உடம்பும் மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூத இணைப்பினல் ஆனது. இந்த ஐந்தும் உடம்பில் இருப்பதைக் காணலாம். இறைவன் உடலை இவ்வாறு படைத்து அருள் செய்கின்ருன்.

இறைவன் கருத்துப்படி இவ்வுலகம்

படைக்கப்படுகிறது

122. குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்

குசவன் மனத்துற்ற தெல்லாம் வனவன் குசவனப் போல்எங்கள் கோன்கந்தி வேண்டில் அசைவில் உலகம் அது.இது ஆமே.

(இ. ள்) குயவன் தனது சக்கரத்தில் வைத்த மண்ணைக் கொண்டு தன் மனத்திற்கு ஏற்ருற் போல் கலங்களைச் செய்வன். அவனைப் போலத்தான் இறைவனும் அசைவற்ற உலகங்கள் பலவற்றைப் படைப்பான்.

(அ - சொர் திரிகை - சக்கரம். வனவன் - செய்வன். கோன் - தலைவனம். நந்தி - இறைவன்.

(விளக்கம்) இறைவனும் குயவன் உலகங்களைத் தன் விருப்பம் போல் படைப்பான் என்பது கூறப்படுகிறது. உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும், நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையான் இறைவன் என்பது ஆன்ருேர் வாக்கு.