பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

igă

(அ.சொரஏற ஏற்றி, இறைவன் சிவபெருமான். அரி திருமால். போதத்தான் - பிரமன்.

(விளக்கம்) இறைஅவன் வடிவம் என்றது. சிவனே என்பது அன்று. சிவன் போலப் பேராற்றலும் தலைமையும் பெறுதல். திருமால் என்பது அஷ்ட ஐஸ்வரியங்களுக்கும் உரியவயை திரு மால் சம்பத்துடையவனவான் என்பது. பிரமன் என்பது வேத ஆகம புராணங்களை உணர்பவன்என் பதாம். இதனால் போகத் திற்கு மட்டும் பெண்டிருடன் கூடாது, ஒரு குறிக்கோளுடன் புணர்ச்சியினை நடத்தவேண்டும் என்பது பெறப்படுகிறது. இதற்கு யோகப்பயிற்சி, பிராணுயாமப் பயிற்சி தேவை. ஆகவே இந்தப் பயிற்சியை ஆசிரியர்பால் கேட்டு அறிதல் வேண்டும்.

உடலைத்தந்த இறைவனை நாடவேண்டும்

126. என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்

செம்பால் இறைச்சி திருந்த மனசெய்து இன்பால் உயிர்நிலை செய்த இறைஓங்கும் கண்பால் ஒருவன நாடுகின் றேனே.

(இ - ள்) எலும்பினுல் பின்னி, நரம்பினல் வரிந்து கட்டி, இரத்த நீர் கொண்டு கையால் ஒழுங்காக அமைக் கப்பட்ட உடலாம் வீட்டில், இன்பத்தோடு உயிர் நிலைத் திருப்பதற்குத் திருவருள் புரிந்த இறைவனை, ஒங்கும் நண் பினல், ஒப்பற்ற அவனைத் தேடுகின்றேன்.

(விளக்கம்) உடம்பு எலும்பு, நரம்பு, இரத்தம், தசை இவற்ருல் கட்டப்பட்டது. இதனுல் இது யாக்கை என்னும் பெயரையும் பெற்றது. இந்த உடலை உதவிய இறைவனே நாம் நாடவேண்டும்.

(அ - சொ) மிடைந்து - பின்னி. என்பு - எலும்பு. வரி . வரிந்து. செம்பால் இரத்தப்பால், இறைச்சி - தசை. மனை - உடம்பாகிய வீடு.