பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219

懿鳞

கற்புடையாளயும் கண்ணுதல் அடியாரையும் நிந்தை செய்பவர் அழிவர் 156. பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்

சித்தம் கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும் சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.

(இ - ள்) கற்புடைய மாதர்கள், பக்தர்கள், உண்மை ஞானம் உணர்ந்தவர்கள் உள்ளம் கலங்கும்படி செயல் களைச் செய்தவர்கள் செல்வமும் உயிரும் ஒரு வருடத்திற் குள் அழிந்துவிடும். இஃது உண்மை; சதாசிவத்தின்மீது ஆணை! -

(அ - சொ) தத்துவம் - உண்மை. அத்தம் - செல்வம். ஆவி - உயிர். சதாநந்தி - சதாசிவம்.

(விளக்கம்) பத்தினிப் பெண்டிர், பக்தர்கள், உண்மை ஞானிகள் உள்ளம் தூயர்கள். அவர்கள் மனத்தை நோக வைப்பின் ஆக்கவும் செய்வர், அழிக்கவும் செய்வர். ஆதலின் அவர்களைப் பழிப்பவர்களின் செல்வம் அழிதலையும் உயிர் நீங்குதலையும் ஈண்டுக் கூறினர். இஃது உண்மை யாதலின் இறைவன் ஆணை எனப் பேசினர்.

அடியார் உள்ளம் கலங்குதல் கூடாது 157. ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்

தேசமும் காடும் சிறப்பும் அழிந்திடும் வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும் நாசம தாகுமே நமருந்தி ஆணையே. (இ - ள்) இறைவனது அன்பர்களின் உள்ளம் கலங் கில்ை தேசம், நாடு, இங்குள்ள சிறப்பு இவை அனைத்தும் அழியும். இந்திரனது பீடம், சக்கரவர்த்திகளின் பீடம் நாசமாகும். இஃது உண்மை, குரு ஆணையாகும்.