பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

盛瑟伊

(அ- சொ) இதயம் - உள்ளம். வாசவன் . இந்திரன், மா - சிறந்த நந்தி - குரு.

(விளக்கம்) அடியார்கள் ஆற்றல் படைத்தவர்கள்; அரனுக்கு ஒப்பானவர். ஆதலின் அவர்கட்குச் செய்யும் தீங்கு இறைவனுக்குச் செய்த தீங்கு போன்றது. ஆகவே நாடும் தேசமும் அழிதல் உறுதி ஆயிற்று. மண்ணுலக வேந்தன் மட்டும் அழிவான் என்பது இல்லை. விண்ணுக தேவனும் அழிவான் என்பதை நன்கு விளக்கினர். குருமேல் ஆணை இட்டும் விளக்கினர்.

குருவின் முன்னே பொய் கூறல் கூடாது

158. சன்மார்க்கச் சற்குரு சந்நிதி பொய்வரின் நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது தொன்மார்க் கம்மாய துறையும் மறந்திட்டுப் பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே.

(இ - ள்) ஞானமார்க்கத்தைப் போதிக்கும் நல் ஆசான் முன் பொய் கூறின், அவன்பால் கேட்ட நல்லொழுக்கம் குறைந்து, ஞானம் சிறிதும் தங்காது மறைந்து விடும். பழைய வழிகளுள் ஏதேனும் அறிந்திருப்பினும், அதுவும் மறைந்துவிடும். ஏன்? பல வழிகளும் சிதைந்து விடும்; நாட்டில் பஞ்சமும் உண்டாகும். *

(அ - சொ) சன்மார்க்கம் - ஞானமார்க்கம். சற்குரு - நல் ஆசான். சந்நிதி - முன். மார்க்கம் - வழி. பஞ்சம் - வறுமை.

(விளக்கம்) பொய் கூறுதல் பெரும்பாவம்; அதிலும் ஞானி முன் கூறுதல் பெரும்பெரும் பாவமாகும். அப் பாவம் கூறியவளுேடு மட்டும் நிற்காது; நாட்டிற்கும் வறுமையைத் தேடித் தரும்,