பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

£32

(அ - சொ) ஆதி - முதல். ஒலக்கம் - சிறப்புடன் வீற் றிருத்தல். உலப்பு - எல்லே. மேனி உடல். ஞாலம் - உலகம். (விளக்கம்) பிரமனும், மாலும் பலர் ஆவர். ஒவ்வோர் யுகத்திற்கும் ஒவ்வோர் மால், பிரமன் உண்டு. அவர்களில் முதல் முதல் தோன்றிய மால் பிரமன் என்பதை விளக்க ஆதி என்ற அடை மொழி தந்தனர். ஆதி என்ற சொல்லைப் பிரமனுக்கும் திருமாலுக்கும் கூட்டுக. இறைவன் தன் மேனியில் திருநீறு பூசுபவன் ஆதலின் பால் ஒத்த மேனியன் என்றனர். ஞாலம், ஈண்டு மண்ணுலகு விண்ணுலகு இரண்டையும் குறிக்கும். .

பெரியோர்களுடன் கூடுதலே இன்பம் 161. அறிவார் அமரர் தலைவன நாடிச் . செறிவார் பெறுவர் சிவதத்து வத்தை

நெறிதான் மிகமிக கின்றருள் செய்யும் பெரியா ருடன்கூடல் பேரின்பம் ஆமே. (இ - ள்) தேவர்கள் இறைவனைத் தேடி அடைவர். இவ்வாறு நெருங்குகின்றவர்கள் சிவத்தின் உண்மையை அடைவர். ஆகவே, இதுவே நல்லவழி என்று அருள்செய்யும் பெரியோர்களுடன் கூடுதல் பேரின்பம் தருவ தாகும்.

(அ - சொ) அமரர் - தேவர். செறிவர் - நெருங்குபவர். தத்துவம் - உண்மை. நெறி - வழி.

(விளக்கம்) இறைவனை அன்பால் நெருங்கில்ை அன்றிச் சிவதத்துவத்தை உணர முடியாது என்பது இதன் கருத்து. தீய வழியில் செல்வாரை நல்வழியில் செலுத்துபவர் பெரியார் என்பதும் ஈண்டுக் கூறப்பட்டது.

இறைவனே அணுகின் வருக என அழைப்பன் 162. உடையான் அடியார் அடியார்களுடன்போய்ப் படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன் கடையார கின்றவர் கண்டறி விப்ப உடையான் வருகென ஒலம்என் ருரே.