பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

224

(விளக்கம்) இங்குக் கூறப்பட்ட எட்டுவகை யோக உறுப் புகள் தனித்தனியே பின்னல் விளக்கப்படுதலின், ஈண்டு அவற்றை விளக்கவில்லை. எட்டுவகையோக உறுப்புக்களின்படி ஒழுகின் பிறப்புக்கு இடம் இல்லை. ஆதலின் அயமுறும் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. பிராணயாமம் ஆயுள் விருத்திக்கும் காரணம் ஆதலின், நயமுறும் என்ற அடைகொடுத்துப் பேசினர். சமாதி தியானம், தாரணை வெற்றிதரும் ஆதலின் சயமிகு என்றனர். -

இமயம் இன்னது என்பது 164. கொல்லான் பொய்கூருன் களவிலான் எண்குணன் - கல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய

வல்லான் புகுத்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இயமத் திடையில்கின் ருனே. ... (இ - ள்) கொலை செய்யாதவனும், பொய் பேசாத வனும், திருட்டுக் குணம் இல்லாதவனும், மதிக்கத் தக்க நற்குணங்களே வாய்க்கப் பெற்றவனும், நல்லவனும், அடக்கமுடையவனும், நடுநிலைமையுடையவனும், கிடைத் ததைப் பிறருக்கும் பங்கிட்டு உண்பவனும், குற்றம் அற்ற வனும், கட்குடியில்லாதவனும், காமவேட்கை அற்றவனும் எவனே, அவனே இயமம்' என்னும் பயிற்சியில் நின்றவன் ஆவான். -

(அ - சொ) எண் மதித்தல். நடு-நியாயம்.மாசு - குற்றம். (விளக்கம்) காமம் என்பது இல்லாளுடன் கூடி இன்புறும் இச்சையினைக் குறிப்பது அன்று. பிறர்மனை நயத்தலில், வேசியர் தொடர்பை மேற்கொள்ளலிற் செல்லும் காம விகாரத்தையே குறிப்பதாகும். -

அம்மை அப்பன அறிபவன் நியமத்தன் ஆவான் 165. ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச் -

சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப் பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன் நீதி யுணர்ந்த நியமத்தன் ஆமே.