பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227

227

(அ - சொ) பங்கயம் - தாமரை. ஆதி - முதல்வன். ஆதனம் - ஆசனம். இருநால் - எட்டு. சொங்கு குற்றம்.

(விளக்கம்) பங்கயம் என்பது பத்மம் எனவும் கூறப்படும். அஃது ஈண்டு பத்மாசனத்தைக் குறிக்கிறது. பத்மாசனத்தினை. எப்படி அமைத்துக் கொள்வது என்பது பின்னர் அறிவிக்கப் படும். பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம், சுகாதனம். சுவத்திகம் என்பன எட்டு ஆதனங்கள். ஆதனமாவது இருக்கை.சுவத்திக ஆதனம் சுகத்தைத் தரும் ஆதனம். முழந்தாளுக்கும் தொடைக்கும் நடுவில் இரண்டு பாத்ங்களையும் வைத்து உடலை நிமிர்த்து உட்கார்ந்திருப்பதே சுவத்திக ஆதனம் ஆகும்.

பத்மாசனமாவது இன்னது எனல்

169. ஒரன அப்பதம் ஊருவின் மேல்ஏறிட்டு

ஆர வலித்ததன் மேல்வைத் தழகுறச் சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப் பார்திகழ் பத்மா சனம்எனல் ஆகுமே. (இ - ள்) ஒவ்வொரு காலையும் மாறித் தொடையின் மேல் உள்ளங்கால் நன்கு மலர இழுத்துப் பொருத்தி வைத்து, அழகுறச் சீர் விளங்கும் கைகளைமேல் வைக்க, அதுவே உலகில் விளங்கும் பத்மாசனம் எனப்படும். - (அ - சொ) ஒர்அணை - ஒரு பக்கம் அனேந்த பாதம். ஊரு தொடை. ஆரவலித்து - மிகஇழுத்து. பார் - பூமி. பத்மா சனம் - தாமரை இருக்கை. பத்மம் - தாமரை.

(விளக்கம்) வலப்பக்கத் தொடையின் மேல் இடப் பாதத்தையும், இடத் தொடையின்மேல் வலப்பாதத்தையும், உள்ளங்கால் நன்கு மலர இழுத்துப்பொருந்தி, அதன்மேல் இருகரங்களையும் மலர்த்தி வைப்பதுவே பத்மாசனம் ஆகும் இரண்டு புறங்கால்களையும் தொடையின்மேல் சேர்த்து இரு தொடையின் மத்தியிலும் இரண்டு கைகளையும் ஒன்றன்மேல் ஒன்ருக மலர்ந்த பாவனையில் வைத்து மூக்கு நுனியில் பார்வை